Sneha Reject Rajinikanth Movie: ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த நடிகை சினேகா! ஏன் தெரியுமா?

First Published Feb 25, 2024, 5:10 PM IST

நடிகை சினேகா, ரஜினிகாந்துடன் இணைந்து இதுவரை ஒரு படம் கூட நடித்திராத நிலையில், தன்னை தேடி வந்த வாய்ப்பை டேட் பிரச்சனை காரணமாக நிராகரித்த தகவல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கேமியோ ரோல் கிடைத்தாலும் அதனை மிஸ் பண்ணாமல் ஏற்று நடிப்பவர் நயன்தாரா. அதே போல் ரஜினிகாந்தின் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியம் கொடுக்கப்படவில்லை என்றாலும், துணிந்து நடிப்பவர். 
 

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கேமியோ ரோல் கிடைத்தாலும் அதனை மிஸ் பண்ணாமல் ஏற்று நடிப்பவர் நயன்தாரா. அதே போல் ரஜினிகாந்தின் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியம் கொடுக்கப்படவில்லை என்றாலும், துணிந்து நடிப்பவர். 

அட அஜித்தின் அம்மாவா இது? தள்ளாத வயதில்... எப்படி இருக்காங்க பாருங்க! AK-வின் அண்ணன் வெளியிட்ட புகைப்படம்!
 

Keerthy Suresh

அதே போல் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் தங்கையாக 'அண்ணாத்த' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விளங்கியதோடு, பாலிவுட் பட வாய்ப்பையும் நிராகரித்தார்

ஆனால் 90'ஸ் ரசிகர்களின் கனவு கன்னி... புன்னகை அரசி சினேகா ரஜினிகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை டேட் பிரச்சனையால் உதறி தள்ளிய தகவல் உங்களுக்கு தெரியுமா?. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய திரைப்படம் 'கோச்சடையான்'. 2014-ஆம் ஆண்டு வெளியான இப்படம், 3டி மோஷன் அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட முதல் இந்தியப்படமாகும்.

கெட்டப்பை மாற்றி.. சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்! பாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சிட்டாங்க!
 

Kochadaiiyaan

இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு முதலில், சினேகாவுக்கு தான் சென்றுள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சினேகா, அவரது காட்சி எடுக்கும் தேதி தள்ளி போய் கொண்டே இருந்ததாலும், மற்ற படங்களில் பிசியாக நடித்து வந்ததாலும்... டேட் பிரச்சனை இப்படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து குசேலன் படத்தில் சில சில காட்சிகளில் மட்டும் இவர் வந்த நிலையில், ஒரு முழு படத்தில் தற்போது வரை ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கமுடியவில்லை.
 

சினேகா வெளியேறிய பின்னர், அவர் ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான், 'ஆனந்த தாண்டவம்' பட நடிகை, ருக்மணி நடித்தார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்திற்கு, கே.எஸ்.ரவிக்குமார் கதை எழுதி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான போதிலும், இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Jovika: வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள்! ஸ்ட்ராப் லெஸ் உடையில்.. சைடு போஸ் கொடுத்த ஜோவிகா!
 

click me!