அதிமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்.! குஷியில் இபிஎஸ்.! அதிர்ச்சியில் பிரேமலதா!

First Published Mar 2, 2024, 1:26 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக இணைந்தது பிரேமலதாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Parliament Elections 2024

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் கூறினார். அதன்படி பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், பாமக பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியின் உடன் கூட்டணி என பாமக திட்டவட்டமாக கூறிவிட்டதால் எந்த கட்சியுடன் போட்டியிட உள்ளது என்பது தெரியவில்லை. 

AIADMK - DMDK

ஆனால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே ஆர்வம் காட்டியதை அடுத்து அவர்களுடன் பிரேமலதா பேச்சுவார்த்தையில் ஈடுபடு உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரேமலதா இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசினர். 

இதையும் படிங்க: தேமுதிக கேட்கும் 4+1.. பிரேமலதாவை சந்தித்த அதிமுக தலைவர்கள்.. இறுதிக்கட்டத்தை எட்டிய கூட்டணி.!

Edappadi Palanisamy

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட பாக்கியராஜ் திடீரென அதிமுகவில் இணைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் பாக்கியராஜ். இவர்  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் தேமுதிக பிரமுகர் இணைந்த சம்பவம் பிரேமலதாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

AIADMK

அதேபோன்று அமமுகவின் தேனி வடக்கு ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் வெற்றிவேல், செங்கல்பட்டு மாவட்ட அமமுக எம்.ஜி.ஆர் அணி பொருளாளர் மலர்கண்ணன், மதுரை மாநகர் மாவட்ட அமமுக வர்த்தக அணி செயலாளர் ஷேக் முகமது ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

click me!