கவர்ச்சியில் கவரும் தமன்னா & ராஷி கண்ணா.. காமெடியில் கலக்கும் யோகி பாபு & VTV கணேஷ் - அரண்மனை 4 Latest Stills!

First Published Mar 14, 2024, 3:04 PM IST

Aranmanai 4 : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெகு விரைவாக உருவாகி வரும் திரைப்படம் தான் அரண்மனை பாகம் 4.

Tamannaah

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் சுந்தர் சி. அதற்கு பின் இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறியது.

Lover 35 Days: 'லவ்வர்' முன்பு தாக்குப்பிடிக்க முடியாமல்.. வாஷ் அவுட் ஆன 'லால் சலாம்'.! கொண்டாடும் ரசிகர்கள்!

Yogi Babu

தமிழ் திரை உலகில் பெரிய அளவில் பிலாப் திரைப்படங்களை கொடுக்காத இயக்குனர்களின் பட்டியல் சுந்தர் சி-க்கும் ஒரு இடம் உண்டு. அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக ஒரு திரைப்படத்தை இயக்கி மக்கள் அதை ரசிக்கும் வண்ணம் கொடுக்கும் ஒரு இயக்குனர் தான் அவர்.

Sundar C

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே அரண்மனை என்கின்ற திரைப்படத்தின் 3 பாகங்களை எடுத்து முடித்துள்ளார். தற்பொழுது அப்படத்தின் 4ம் பாகத்தை இயக்கி வருகிறார். வருகின்ற ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகைகள் தமன்னா ராசி கண்ணா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸூக்கு டஃப் கொடுக்க வரும் பிரேமலு... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இதோ

click me!