விஜய், அஜித் மட்டும் மிஸ்ஸிங்... ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்ட ஷங்கர் மகளின் Reception போட்டோஸ் இதோ

First Published Apr 16, 2024, 1:04 PM IST

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய மகன் ராம்சரண் மற்றும் குடும்பத்தினரோடு வந்து இயக்குனர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார். ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் தான் இது. இவர்கள் இருவருமே தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் உடன் வந்து ஷங்கர் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார்.

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தி உடன் வந்து ஐஸ்வர்யா - தருண் ஜோடியின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கோலிவுட்டின் சென்சேஷனல் டைரக்டரான லோகேஷ் கனகராஜ், ஷங்கர் மகள் வெட்டிங் ரிசப்ஷனில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.

இசையமைப்பாளர் அனிருத்தும், ஜெயிலர் என்கிற மாஸான கம்பேக் படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சனும் ஒன்றாக வந்து ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... அக்காவின் வெட்டிங்கில் அதகளமாக டான்ஸ் ஆடி ரன்வீர் சிங்கை மெர்சலாக்கிய ஷங்கர் மகன் அர்ஜித் - வீடியோ இதோ

கோலிவுட்டின் டாப் இயக்குனரான வெற்றிமாறன், ஷங்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மோகன்லால், ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வாழ்த்திய தருணம் இது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய பிசி ஷெட்யூலுக்கு மத்தியிலும் வந்து ஐஸ்வர்யா- தருண் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய மனைவி, மகள்கள் மற்றும் மகன் உடன் வந்து தன்னுடைய நண்பன் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் இது.

கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் வந்து ஐஸ்வர்யா ஷங்கரின் வெட்டிங் ரிசப்ஷனில் கலந்துகொண்டார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் ஷங்கர் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டது மட்டுமின்றி மணமக்களுடன் நடனமாடியும் அசத்தினார்.

இதையும் படியுங்கள்... Vijay Wife: விஜய் இன்றி தனியாக வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சங்கீதா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

click me!