Asianet News TamilAsianet News Tamil

அக்காவின் வெட்டிங்கில் அதகளமாக டான்ஸ் ஆடி ரன்வீர் சிங்கை மெர்சலாக்கிய ஷங்கர் மகன் அர்ஜித் - வீடியோ இதோ

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் வெட்டிங் ரிசப்ஷனில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் அட்லீ ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

First Published Apr 16, 2024, 12:10 PM IST | Last Updated Apr 16, 2024, 12:10 PM IST

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர், இந்தியன் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார். அதேபோல் இந்தியன் 2 திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களில் பிசியாக உள்ள இயக்குனர் ஷங்கர், தன்னுடைய பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவர் தருண் கார்த்திகேயன் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டுமே ஆஜராகிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, சூர்யா, கார்த்திக், சீயான் விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அட்லீ, மணிரத்னம், சுஹாசினி, பிரியா பவானி சங்கர், விஜயகுமார், அனிதா விஜயகுமார், விஜய்யின் மனைவி சங்கீதா, பிரீத்தா ஹரி என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.

திருமணம் முடிந்த கையோடு, ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்று உள்ளது. அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கரும், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் சேர்ந்து நடிகர் ரன்வீர் சிங் உடன் அப்படிபோடு, வாத்தி கம்மிங் மற்றும் மா மதுரை போன்ற பாடல்களுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Video Top Stories