மகளின் 2-வது திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடித்தார் இயக்குனர் ஷங்கர்... முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

First Published Apr 15, 2024, 1:06 PM IST

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் இன்று சென்னையில் கோலாகமலாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் ஷங்கர். அவர் இயக்கத்தில் தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்றி இந்தியன் 2, கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. மற்றொன்று கேம் சேஞ்சர், தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படமும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

இப்படி செம்ம பிசியான இயக்குனராக வலம் வரும் ஷங்கர், இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் தன்னுடைய மகளின் இரண்டாவது திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடித்திருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் - தருண் கார்த்திகேயனுக்கு சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படியுங்கள்... தன்னிடம் வேலை பார்த்தவருக்கே தன் பொண்ணை கொடுத்த ஷங்கர்... அடுத்த அட்லீயா? யார் இந்த தருண் கார்த்திக்?

ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணமாகும். இதற்கு முன்னர் தொழிலதிபரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரோஹித் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. ஆனால் திருமணான சில மாதங்களிலேயே இருவரும் சில பிரச்சனைகளால் பிரிந்துவிட்டனர். பின்னர் ரோஹித் உடன் விவாகரத்து பெற்று பிரிந்த ஐஸ்வர்யா, தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரிடமே உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஷங்கரின் மருமகன் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தருண் கார்த்திகேயன் இயக்குனராக மட்டுமின்றி பாடகர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் விரைவில் தருண் கார்த்திகேயன் வெளிச்சத்துக்கு வந்து அடுத்த அட்லீயாகவும் உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... Keerthy: பாலிவுட் போனாலும் பாரம்பரியத்தை மறக்காத நடிகை கீர்த்தி சுரேஷின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

click me!