ஜெயிலரால் ஜே ஜேனு மாறிய வாழ்க்கை... சம்பள விஷயத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரையே மிஞ்சிய நெல்சன்!

First Published Aug 31, 2023, 10:28 AM IST

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் நெல்சன் தனது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Nelson

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் நெல்சன். இவர் இயக்கிய முதல் படமான வேட்டை மன்னன் டிராப் ஆனாலும், அதன்பின்னர் தன்னுடைய விடாமுயற்சியால் கோலமாவு கோகிலா படம் மூலம் விஸ்வரூப வெற்றி கண்டார் நெல்சன். அதன்பின்னர் தன்னுடைய நண்பனான சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து டாக்டர் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்த நெல்சனுக்கு அடுத்ததாக தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Nelson, Rajinikanth

விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். அப்படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் நெல்சனை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இதனால் மனமுடைந்து போகாத நெல்சன், ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்து வேறலெவலில் கம்பேக் கொடுத்துள்ளார். ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.550 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.. பாய் ஃப்ரெண்டுடன் ரகசிய நிச்சயதார்த்தம்? அந்த சீக்ரெட் காதலன் யார் தெரியுமா?

Jailer director nelson

பீஸ்ட் படம் ரிலீஸ் ஆகும் முன்னரே ஜெயிலர் படத்தில் கமிட் ஆன நெல்சனுக்கு முதலில் ரூ.30 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம். ஆனால் பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டுக்கு பின்னர் நெல்சனின் சம்பளத்தை குறைத்த சன் பிக்சர்ஸ், ஜெயிலர் படத்துக்காக அவருக்கு ரூ.22 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கி இருந்தார்களாம். தற்போது ஜெயிலர் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் தன்னுடையை சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம் நெல்சன்.

Nelson salary

ஜெயிலர் படத்துக்கு பின் சில மாதங்கள் ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்துள்ள நெல்சன், தற்போதைக்கு அடுத்த பட அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அவரது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக நெல்சனுக்கு ரூ.55 கோடியை சம்பளமாக கொடுக்கவும் முடிவு செய்து உள்ளார்களாம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரே ஒரு படத்துக்கு ரூ.50 கோடி சம்பளமாக வாங்கி வரும் நிலையில், ஜெயிலர் வெற்றிக்கு பின்னர் அவரையே மிஞ்சி இருக்கிறார் நெல்சன்.

இதையும் படியுங்கள்... பாடல்களால் ரசிகர்களுக்கு இசை போதையை ஏத்திவிட்டு கோடி கோடியாய் சம்பாதித்த யுவனின் சொத்து மதிப்பு இவ்வளவா?

click me!