மணிரத்னம் சுஹாசினியின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..

First Published Feb 11, 2024, 2:40 PM IST

இயக்குனர் மணிரத்னம் - சுஹாசினியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று உலக திருமண தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் மணிரத்னம் - சுஹாசினியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

இந்தியாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் மணி ரத்னம். தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர்களி மனிரத்னத்திற்கும் முக்கிய பங்குண்டு. தனது தனித்துவமான மேக்கிங் மூலம் தமிழ் சினிமாவின் இலக்கணத்தையே மறு வரையறை செய்தவர்.

சினிமா பற்றிய எந்த தொழில்நுட்ப படிப்பையும் படிக்காமல். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இயக்குனராக அறிமுகமானவர் மணி ரத்னம். இவர் இயக்கிய முதல் படம் பல்லவி அனு பல்லவி என்ற கன்னட படம். இந்த படத்திற்கு நல்ல வரரேற்பு கிடைத்த நிலையில் மலையாள திரையுலகில் நுழைந்தார். 

பின்னர் 1985-ம் ஆண்டு பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இவர் இயக்கிய இதய கோயில் படம் வெற்றி படமாக மாறியது. ஆனால் அவருக்கு திருப்பு முனை ஏற்படுத்திய படம் என்றால் அது மௌன ராகம் தான். இந்த படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து மணி ரத்னம் இயக்கிய நாயகன் படம் கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. 

தொடர்ந்து தளபதி, ரோஜா, அஞ்சலி, பம்பாய், உயிரே என அடுத்தடுத்து கிளாசிக் ஹிட் படங்களை கொடுத்தார் மணி ரத்னம். இதே போல் அலைபாயுதே, குரு, ராவணன், ஓ.கே கண்மணி போன்ற படங்களை இயக்கினார். ஓரிரு தோல்வி படங்களை கொடுத்தாலும் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய பிரம்மாண்ட படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

மணிரத்னம் 80களில் பிரபலமாக இருந்த நடிகை சுஹாசினியை 1988-ம் ஆண்டு திருமணம் செய்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார் சுஹாசினி. நடிகை மட்டுமின்றி, இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். மணிரத்னம் – சுஹாசினி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.  

சுஹாசினியும் மணிரத்னமும் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மணிரத்னம் சுஹாசினியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Thug Life Crew

மணிரத்னம் தற்போது கமல்ஹாசானை வைத்து தக்லைஃப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவிறுபாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

click me!