தலைவர் 171 ஷூட்டிங் முடிஞ்ச உடனே கைதி 2.. ஒரே மேடையில் 2 சூப்பர் அறிவிப்பு - ரசிகர்களை குஷியாக்கிய லோக்கி!

First Published Mar 25, 2024, 7:02 PM IST

Lokesh Kanagaraj : உலக நாயகன் கமல்ஹாசன் வரிகள் எழுத, ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ள இனிமேல் என்ற ஆல்பத்தில் நாயகனாக நடித்துள்ளார் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

maanagaram

"மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்பொழுது தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல. அவருடைய இயக்கத்தில் வெளியான "கைதி", "மாஸ்டர்", "லியோ" மற்றும் "விக்ரம்" போன்ற எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது. குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படமும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படமும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது.

பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா கேட்கும் விஜய் ஆண்டனி! கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியானது 'Romeo' ட்ரைலர்!

Vikram

இந்நிலையில் அடுத்தபடியாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள அவருடைய 171வது படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று வெளியாகி உள்ள "இனிமேல்" என்கின்ற இசை ஆல்பத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர் தலைவர் 171 திரைப்படம் பற்றிய தகவலையும், கைதி 2 திரைப்படம் பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். 

thalaivar 171

வருகின்ற ஜூன் மாதம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகவுள்ள அவருடைய 171வது பட பணிகள் துவங்கும் என்றும், சுமார் 4 முதல் 5 மாதங்களாக அதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை செய்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். அதேபோல தலைவர் 171 பட பணிகள் முடிந்த ஒரு மாத இடைவெளியில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பையும் தான் துவங்க உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

ஜோராக நடந்து முடிந்த இந்திரஜா சங்கரின் திருமணம் - வெயிட்டாக மொய் வைத்து மணமக்களை வாழ்த்திய நடிகர் சூரி!

click me!