எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருது... முதன்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்

First Published Mar 11, 2024, 8:07 AM IST

ஓப்பன் ஹெய்மர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன், முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று வரலாறு படைத்திருக்கிறார்.

christopher Nolan

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்கும். ஆனால் அப்படங்களை இயக்கிய இயக்குனர்களில் வெகு சிலருக்கு மட்டுமே உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். அந்த பட்டியலில் முதன்மையானவராக இருப்பவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரது கற்பனைக்கு அப்பாற்பட்ட கதையம்சம் கொண்ட படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். ஹாலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் கிறிஸ்டோபர் நோலன்.

Christopher Nolan Oppenheimer

ஒரு திரைக் கலைஞனுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுவது விருதுகள் தான். அதிலும் ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கர் விருது வெல்வதை ஒரு இலக்காக வைத்து தான் பல்வேறு விதமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்டோபர் நோலனும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல்வேறு பிரம்மாண்ட படங்களை கொடுத்திருந்தாலும், அவருக்கு ஒரு ஆஸ்கர் விருது கூட கிடைக்காமல் இருந்தது.

இதையும் படியுங்கள்... Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ

Oppenheimer movie won oscars

இதுவரை டன்கிர்க் என்கிற படத்தை இயக்கியதற்காக கடந்த 2017-ம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான பிரிவில் நாமினேட் ஆகி இருந்தார். அதேபோல் இன்சப்சன் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் திரைக்கதை பிரிவில் கடந்த 2010-ம் ஆண்டு நாமினேட் ஆகி இருந்தார். அதே பிரிவில் மெமெண்டோ படத்துக்காக 2001-ம் ஆண்டு நாமினேட் ஆகி இருந்தார். இந்த மூன்று முறையும் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார் கிறிஸ்டோபர் நோலன்.

christopher Nolan won oscar

ஆனால் இம்முறை எப்படியாவது அவ்விருதை தட்டிதூக்க வேண்டும் என்கிற முனைப்போடு ஓப்பன்ஹெய்மர் என்கிற தரமான திரைப்படத்தை இயக்கினார். அவர் எதிர்பார்த்தபடியே அப்படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. அதுமட்டுமின்றி தனக்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருதை இம்முறை ஓப்பன்ஹெய்மர் படத்தின் மூலம் எட்டிப்பிடித்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன். அப்படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தளபதி விஜயின் GOAT.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த யுவன் சங்கர் ராஜா - என்ன அது தெரியுமா?

click me!