ஜவான் படத்துக்கு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம்... அடுத்த படத்துக்காக அதிரடியாக டீல் பேசி முடித்த அட்லீ..!

First Published Mar 11, 2024, 12:49 PM IST

ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த அட்லீ, தன்னுடைய அடுத்த படத்திற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.

Atlee

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக நடிகர் விஜய்யின் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட அவர், தெறி படத்தின் மூலம் அதிரி புதிரியான வெற்றியை கொடுத்து விஜய்யின் பேவரைட் இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்தார்.

Vijay, Atlee

இதையடுத்து மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் அட்லீ இயக்கத்தில் நடித்தார் விஜய். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்தன. இப்படி அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்த அட்லீ, அவரை வைத்து ஜவான் என்கிற மாஸ் படத்தை இயக்கினார். அப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... மனைவி மீதுள்ள காதலை சொல்ல... சாமி பட பாடலில் நா.முத்துகுமாருக்கே அல்வா கொடுத்து 2 வரிகளை சொருகிய இயக்குனர் ஹரி

Atlee, Shah rukh khan

ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பக்கா மாஸ் படமாக ஜவான் இருந்ததால் அட்லீயை பாலிவுட் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. ஜவான் திரைப்படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் வெற்றியை ருசித்ததால், அட்லீயை அலேக்காக தூக்கி செல்ல பாலிவுட் நடிகர்கள் கியூவில் காத்திருக்கிறார்கள். ஆனால் அட்லீ, அதற்கு முன்பே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை இயக்க கமிட் ஆனதால் பாலிவுட் ஹீரோஸை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துள்ளார்.

Atlee salary for Allu Arjun Movie

அதன்படி அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளார். அப்படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்திற்காக அட்லீ கேட்டுள்ள சம்பளம் தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. ஜவான் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கிய அட்லீ, அப்படத்தின் வெற்றியால் தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ரூ.60 கோடி கேட்டிருக்கிறார். இதற்கான டீலிங்கும் பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் லிஸ்ட்டில் ஷங்கரை பின்னுக்கு தள்ளி உள்ளார் அட்லீ.

இதையும் படியுங்கள்... ரஜினியும் இல்ல... கமலும் இல்ல; கோலிவுட்டில் முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய மாஸ் நடிகர் யார் தெரியுமா?

click me!