அதிர்ச்சி தோல்வி - கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்!

First Published May 23, 2024, 9:29 AM IST

எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோளல்வி அடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கண்ணீமல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

கடந்த 1985 ஆம் ஆண்டு ஜூன் 01ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் தினேஷ் கார்த்திக். ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார்.

Watch Dinesh Karthik Retirement Video - Twitter

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உள்பட 4842 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97* ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் ஆரம்பத்திலேயே இது தான் தனது கடைசி ஐபிஎல் சீசன் என்று அறிவித்தார் தினேஷ் கார்த்திக்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன் பிறகு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடர்ந்து 7 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்திருந்தது. மேலும், அடுத்தடுத்து தோல்வியின் காரணமாக ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Dinesh Karthik LBW

ஆனால், கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று சரியான கம்பேக் கொடுத்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி நெட் ரன்ரேட் அடிப்படையில் 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆஃப் சுற்று போட்டியில் எலிமினேட்டரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

இந்தப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார்.

RCB Dinesh Karthik Retirement

பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், காட்மோர் 20 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Dinesh Karthik Retirement

சஞ்சு சாம்சன் 17, துருவ் ஜூரெல் 8, ரியான் பராக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்களில் வெளியேற, கடைசியில் ரோவ்மன் பவல் 16 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Dinesh Karthik Retirement

இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Dinesh Karthik IPL Retirement

இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி பரிதாபமாக 3ஆவது முறையாக எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இது தினேஷ் கார்த்திக்கின் கடைசி ஐபிஎல் போட்டி என்று அப்போது தெரியவில்லை. கடைசியில் இந்தப் போட்டியில் தோற்கவே கண்ணீர்மல்க ஓய்வு பெற்றார். மேலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு ஆர்சிபி வீரர்கள் ராஜ மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடிய 15 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!