
பெங்களூரில் பிறந்து, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே. இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி பெங்களூரில் பிறந்தவர். தனது 18வது வயதில் கன்னட மொழியில் நடிகையாக அறிமுகமாகினார் சம்யுக்தா ஹெக்டே.
தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்த சம்யுக்தா ஹெக்டே, தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான "வாட்ச்மேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே 2019ம் ஆண்டு தமிழில் மட்டும் இவர் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக ஜெயம் ரவியின் "கோமாளி" திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது என்றே கூறலாம். இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "மன்மத லீலை" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த சமியுப்தா தற்பொழுது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
26 வயதே நிரம்பிய சம்யுக்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கம் கொண்டவர். அதுமட்டுமல்ல சம்யுக்தா ஒரு சிறந்த யோகா கலைஞரும் கூட என்பது பலர் அறியாத உண்மை. இந்நிலையில் இன்று உலக யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் தனது ரசிகர்களை மிரட்டிவிட்டுருக்கிறார் அவர் என்று தான் கூறவேண்டும்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், அவர் அனாயசமாக பலவித யோகா செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். நெட்டிசன்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.