அப்பா நடிப்புல டாப்பு... மகன் படிப்புல டாப்பு - ப்ளஸ் 12 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்... தனுஷ் மகன் அசத்தல்

First Published May 7, 2024, 2:44 PM IST

நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ஜோடிக்கு மகனாக பிறந்த யாத்ரா, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் குறித்த விவரம் கசிந்துள்ளது.

dhanush son

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். இதையடுத்து காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த தனுஷ், கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் பிறந்தனர். மகன்கள் பிறந்த பின்னர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா.

aishwarya rajinikanth son Yatra

முதலில் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அடுத்ததாக வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இதன்பின்னர் மீண்டும் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்ட ஐஸ்வர்யா, மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே சுமார் 18 ஆண்டுகள் ஜோடியாக வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படியுங்கள்... Kanakalatha Death : பார்கின்சன் நோயால் படாதபாடு பட்ட சுந்தர் சி பட நடிகை... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Yatra Dhanush

தனுஷ் உடனான விவாகரத்துக்கு பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இருப்பினும் இப்படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் பிளாப் ஆனது. மறுபுறம் நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ராயன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

Yatra Dhanush 12th mark

இந்த நிலையில், நடிகர் தனுஷின் மகன் யாத்ராவின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி மொழிப்பாடத்தில் நூறுக்கு 98 மதிப்பெண் எடுத்துள்ள யாத்ரா, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்ணும் பெற்றும் மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் வாங்கி இருக்கிறாராம். இதனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே செம்ம சந்தோஷத்தில் உள்ளார்களாம். 

இதையும் படியுங்கள்... Selvaraghavan: தனுஷே அடிவாங்குவான்..! செல்வராகவனை பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க... பிரபலம் கூறிய தகவல்!

click me!