மகள் சாதி மறுப்பு திருமணம்.! மருமகனை ஆணவக் கொலை செய்ய ஸ்கெட்ச்.! சிக்கிய தங்கை.! நடந்தது என்ன?

First Published Mar 8, 2024, 7:29 AM IST

மகள் சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரத்தில் தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Erode Love

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷின் மகன் சுபாஷ்(24). பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Caste Rejection Marriage

இந்நிலையில் இருவரும் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனால், தங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மகள் மற்றும் மருமகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி 10ம் வகுப்பு படித்து வரும் தங்கையை ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த வேன் ஒன்று இவர்கள் மீது மோதியது. 

Honor killing

இதில், அண்ணன், தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதில், சுபாஷுக்கு கால் தொடையில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவரது தங்கைக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் துடித்தார். இதனையடுத்து திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு சந்திரன் தனது மனைவி சித்ராவின் ஸ்கூட்டியில் ஏறி தப்பியோடி இருவரும் தலைமறைவாகினர். 

younger sister Murder

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் தங்கை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சுபாஷ் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Police Arrest

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண்ணின் தந்தை மருமகனை  ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. சந்திரன் மற்றும் மனைவி சித்ரா தலைமறைவாக இருந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த ஹாசினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

click me!