தங்கல் தொடங்கி ஜவான் வரை.. 1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 இந்திய படங்கள் - லிஸ்ட் இதோ!

First Published Sep 30, 2023, 4:35 PM IST

ஒரு திரைப்படத்தின் வெற்றியை நாம் இரு வகையில் கணக்கிடலாம், ஒன்று அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை கொண்டு அந்த படத்தின் வெற்றியை அறியலாம். அதேபோல அந்த படம் வியாபார ரீதியாக எத்தனை கோடிகளை பெற்றுள்ளது என்பது மூலமாகவும் அந்த வெற்றியை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Dangal

அந்த வகையில் இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிதிஷ் திவாரி என்பவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் தங்கல். தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கிற ஒரு பாசப் போராட்டத்தை மிக நேர்த்தியாக கூறிய இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 2000 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது.

சூர்யா முதல் தனுஷ் வரை.. படங்களுக்காக 6 பேக் வைத்து படு ஸ்டைலாக மாறிய தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ..

Bahubali 2

பாகுபலி 2, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் பாகுபலி. கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் சுமார் 1800 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

rrr

அதேபோல மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை கண்டு ஆஸ்கர் வரை சென்று விருது பெற்ற படம் தான் RRR. உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

kgf 2

கன்னட திரைப்படங்கள் மீது இந்திய சினிமாவிற்கு இருந்த பார்வையை பெரிய அளவில் மாற்றிய பங்கு நடிகர் யாஷ் அவர்களை சேரும். அதற்கு அவருடைய கேஜிஎப் திரைப்படங்கள் இரண்டுமே சாட்சி, விரைவில் அந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் சுமார் 1250 கோடி ரூபாயை வசூல் செய்தது.

Jawan

ஜவான், பிரபல தமிழ் இயக்குனர் அட்லி அவர்கள் முதல் முறையாக பாலிவுட்டில் களம் இறங்கி ஹாலிவுட் உலகின் பாட்ஷாவாக திகழ்ந்துவரும் ஷாருக்கான் அவர்களை வைத்து எடுத்த திரைப்படம் தான் இந்த திரைப்படம். இன்றளவும் நல்ல முறையில் ஓடிவரும் நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலை தாண்டியுள்ளது. 

Aadhi Gunasekaran Entry: ஆதி குணசேகரன் ஆட்டம் ஆரபிக்க போகுது! புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர் இவரா?

click me!