டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனலில் தோல்வியடைந்த பெண்... சூப்பர் ஹிட் சீரியல் சான்ஸ் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ

First Published Apr 16, 2024, 2:36 PM IST

டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட கெளரிக்கு அண்ணா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நவீன் - அக்ஷதா ஜோடி தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. 

Dance Jodi Dance Gowri

மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் ரன்னர் அப்பாக இப்ராஹிம் அக்ஷிதாவும் இரண்டாவது ரன்னர் அப்பாக விவேக் - கௌரி ஜோடியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருந்தாலும், இவர்களின் வாழ்க்கையை மாற்றிய மேடையாக இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் மேடை அமைந்தது. 

இதையும் படியுங்கள்... Reshma : சின்னத்திரை to வெள்ளித்திரை.. மின்னும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி - ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதன்படி இதில் பல லைஃப் சேஞ்சிங் நிகழ்வுகள் அரங்கேறின. அதில் ஒன்றாக போட்டியாளர்களில் ஒருவரான ஜான் எட்வின் அப்பாவிற்கு ஒரு கடையை உருவாக்கி கொடுத்தனர். அதே போல் நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் போட்டியாளராக வந்த கௌரிக்கு அண்ணா சீரியலில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளனர். 

இது குறித்து ஷண்முகமாக நடிக்கும் மிர்ச்சி செந்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் பேச கௌரி நான் உங்க சீரியலில் நடிக்க போறனா என்று கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். எனக்கு இது லைஃப் சேஞ்சிங் மூமென்ட் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிக்க பல இடங்களில் வாய்ப்பு தேடி சென்று நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கௌரி தெரிவித்துள்ளார். விரைவில் அண்ணா சீரியலில் வீராவாக கௌரியை பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அக்காவின் வெட்டிங்கில் அதகளமாக டான்ஸ் ஆடி ரன்வீர் சிங்கை மெர்சலாக்கிய ஷங்கர் மகன் அர்ஜித் - வீடியோ இதோ

click me!