CWC 5 contestants : குக் வித் கோமாளி 5 : இவர்கள் தான் 8 போட்டியாளர்களா? அட இவங்களுமா இருக்காங்க..

First Published Apr 11, 2024, 11:00 AM IST

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிக பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. 

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியது. அதே போல் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த நிகழ்ச்சி தொடங்கும். ஆனால் இந்த சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர், நடுவர் ஆகியோர் அடுத்தடுத்து விலகியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது. அதில் வெங்கடே பட்டுக்கு பதில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்வது உறுதியானது. இதனால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

இந்த சூழலில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

அதன்படி பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 நடிகர் வசந்த், சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி, நடிகை திவ்யா துரைசாமி, இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே யாரெல்லாம் கலந்து கொள்கின்றனர் என்பது உறுதியாக தெரியும்.

click me!