சித்திரை மாத ராசி பலன்கள் 2024 : உச்சத்தை தொடும் டாப் 5 ராசிகள்..இதுல உங்க ராசி இருக்கா..?

First Published Apr 11, 2024, 4:32 PM IST

சூரிய பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி ஆகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிஷ்ட ராசிகள் யாரெல்லாம் பார்க்கலாம் வாருங்கள்...

சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8:51 மணிக்கு மீனத்திலிருந்து, மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி ஆகிறார். மேலும் அங்கு சூரியன் உச்சம் அடைய உள்ளதால், மேஷம் உட்பட 5 ராசிக்காரர்கள் மட்டும் எல்லா துறைகளிலும் வெற்றியை பெறுவார்கள். அந்த அதிஷ்ட ராசிகள் யாரெல்லாம் பார்க்கலாம் வாருங்கள்...

மேஷம்: இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: இந்த சித்திரை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் பல இடையூறுகள் வந்தாலும் வெற்றி அடைவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்: இந்த சித்திரை மாதத்தில் கடகம் ராசிக்காரர்கள் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை நன்றாக உயரும். 

சிம்மம்: இந்த சித்திரை மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். நிதி நிலைமை முன்பைவிட மேம்படும்.
 

Scorpio Zodiac

விருச்சிகம்: இந்த சித்திரை மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

click me!