சித்திரை மாத அமாவாசை சிறப்பு பற்றி தெரியுமா..? இத செய்யுங்கள் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும்!

First Published May 7, 2024, 11:14 AM IST

இந்த சித்திரை மாத அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சித்திரை மாத அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. அதன் படி, இன்று சித்திரை மாத அமாவாசை ஆகும். இந்நாளில் அதிகாலையிலேயே எழுந்து, ஆற்றங்கரை மற்றும் குளக்கரையில் முன்னோர்களுக்குத் திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை உங்களால் இன்று தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால், கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக கொடுக்கலாம். இதன் மூலம், முன்னோர்களுக்குத் திதி கொடுத்த பலன் உங்களுக்கு கிடைக்குமாம். மேலும் இந்நாளில், 
முன்னோர்களை வழிபட்டால், பித்ரு சாபம் நீங்கி நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த சித்திரை அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபட்டால் செய்யும் காரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அதுபோல, திருமணத்தில் தடை இருப்போருக்கு விரைவில் திருமணம் ஆகும். 

இதையும் படிங்க: இன்று சித்திரை மாத அமாவாசை 2024... தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் இதுதான்!

வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், நீண்ட நாள் நோயால் அவதிப்படுபவர்களுக்கும் இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.அதுபோல, வியாபாரம் செய்பவர்கள் இந்த சித்திரை மாத அமாவாசை நாளில், வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள திருஷ்டி கழிக்க அதற்குரிய நேரத்தில் திருஷ்டி பூசணிக்காயை உடைக்க வேண்டும். 

இதையும் படிங்க:  மகாளய அமாவாசை அன்று ஏன் வாழைக்காய் முக்கியம் தெரியுமா? ..தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

இந்த அமாவாசை தினத்தில் தானம் செய்வது உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக நீங்கள் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்றால் இந்நாளில் தானம் செய்ய வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது ஆனால் உங்கள் சக்திக்கு மீறு தானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, உங்களால் முடிந்த வரை உணவு, உடை ஆகியவற்றை தானமாக கொடுங்கள். இதனால் பலன் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, நீங்கள் இந்நாளில் விரதம் இருந்து பிறருக்கு தானம் செய்து இரட்டிப்பான பலனை பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!