18 வருடத்துக்கு பின் ஜோடியாக நடிக்க வந்த திரிஷாவுக்கு சிரஞ்சீவி கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

First Published Mar 12, 2024, 9:46 AM IST

விஸ்வம்பரா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திரிஷாவுக்கு நடிகர் சிரஞ்சீவி காஸ்ட்லி கிப்ட் ஒன்றை கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

Vishwambhara

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்துள்ளன. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதைத் தொடர்ந்து மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.

Chiranjeevi starrer Vishwabhara

இதுதவிர மலையாளத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ள திரிஷா, தெலுங்கிலும் ஒரு படத்தை கைவசம் வைத்துள்ளார். அதுதான் விஸ்வம்பரா. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இப்படத்தின் மூலம் நடிகை திரிஷாவும், நடிகர் சிரஞ்சீவியும் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை வசிஸ்டா மலிடி இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் கழட்டிவிட்ட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்... ஒருவழியாக தனது கடைசி பட இயக்குனரை லாக் செய்த தளபதி

Trisha

விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து அங்கு ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை திரிஷா அண்மையில் கலந்துகொண்டார். அப்போது சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிரஞ்சீவி கொடுத்த அந்த பரிசை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள திரிஷா, அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Chiranjeevi Gift to Trisha

அதன்படி டெம்பரேச்சரை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியுடன் கூடிய அதிநவீன மக் ஒன்றை தான் சிரஞ்சீவி பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த மக் பேன்ஸியாகவும், தனக்கு பயனுள்ளதாகவும் திரிஷா கூறி உள்ளார். இந்த ஸ்மார்ட் மக்கின் விலை 35 ஆயிரமாம். இதை அறிந்த நெட்டிசன்கள் பார்க்க சிம்பிளாக இருந்தாலும் இந்த மக் இவ்வளவு காஸ்ட்லியா என வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் விஸ்வம்பரா படத்தில் நடிகை திரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனை தொடர்ந்து.. நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை அள்ளிக்கொடுத்த தளபதி விஜய்!

click me!