Minmini : நீ இங்க மட்டும் பாடுனா போதும்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடகிக்கு வாய்ப்பளிக்க மறுத்த இளையராஜா

First Published Apr 29, 2024, 11:31 AM IST

ஏ.ஆர்.ரகுமான் இசையில் சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய தனக்கு இசைஞானி இளையராஜா வாய்ப்பளிக்க மறுத்ததாக பாடகி ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.

Ilaiyaraaja, Minmini

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, அப்படம் காலம் கடந்து கொண்டாடப்படுவதற்கு அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணம். அப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக அதில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஹிட் ஆனது.

singer Minmini

சின்ன சின்ன ஆசை பாடல் வரிகளை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் பாடல் இன்று வரை பலரது பிளே லிஸ்டில் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு அப்பாடலை தன்னுடைய தனித்துவமான குரலில் பாடிய பாடகி மின்மினியும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை பாடிய பாடகி மின்மினி அதன் பின்னர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார்.

இதையும் படியுங்கள்... Samuthirakani : சாதி பார்க்கும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - பல விஷயங்களை ஓப்பனாக பேசிய சமுத்திரக்கனி!

AR Rahman, Minmini, Ilaiyaraaja

பாடகி மின்மினிக்கு சின்ன சின்ன ஆசை பாடல் பெயரையும் புகழையும் பெற்று தந்தாலும் அவரை அறிமுகப்படுத்தியது இளையராஜா தான். இசைஞானி இசையில் வெளிவந்த மீரா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் மின்மினி. கடந்த 1993ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் பாடி வந்த இவர் அதன்பின் திடீரென வந்த நோய் பாதிப்பின் காரணமாக பாடும் திறனை இழக்க நேரிட்டது. இதனால் சினிமாவை விட்டே விலகினார் மின்மினி.

பல்வேறு விதமான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய மின்மினி ஒருசில படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாடகி மின்மினி, இளையராஜா மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து உள்ளார்.

Ilaiyaraaja

அதில் அவர் கூறுகையில், சின்ன சின்ன ஆசை பாடல் வெளியாகி ஹிட் ஆன சமயத்தில் இளையராஜா இசையமைத்த தாலாட்டு என்கிற படத்திற்கான பாடல் பதிவுக்கு சென்றிருந்தேன். அப்போது பாடல் ரெக்கார்டிங்கின் போது சின்ன சின்ன கரெக்‌ஷன் சொல்ல வந்த இளையராஜா, நீ எதுக்கு அங்க இங்கெல்லாம் போய் பாடிட்டு இருக்க. இங்க மட்டும் பாடுனா போதும்னு சொன்னார். அதன்பின்னர் அவர் என்னை பாட அழைக்கவே இல்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய பின்னர் எனக்கு பாட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என மின்மினி கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Jigarthanda DoubleX: ஜப்பானில் ஹவுஸ்புல்லாக ஓடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! செம்ம குஷியில் கார்த்திக் சுப்புராஜ்

click me!