கோடிக்கணக்கான சொத்துக்களுடன் நியூசிலாந்தில் செட்டில் ஆன பிக்பாஸ் யுகேந்திரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

First Published Oct 14, 2023, 4:01 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள யுகேந்திரனின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Yugendran

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 16 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதுவரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறி உள்ளனர். இதில் அனன்யா முதல் வார இறுதியில் எலிமினேட் ஆனார். அதற்கு மறுநாளே பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாததன் காரணமாக இந்நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறினார்.

Yugendra Vasudevan

தற்போது 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் ஒருவராக உள்ளார். இவரும் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றினாலும், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Bigg Boss Yugendran

நியூசிலாந்தில் தொழில் செய்து வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு சினிமாவில் திருப்புமுனை கிடைக்காத என்கிற கனவோடு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர் வயதை காரணம் காட்டி அவருக்கு டாஸ்க்கில் பங்கேற்க முடியாது என சக போட்டியாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று அனைவரையும் வாயடைக்க செய்தார்.

Yugendran net worth

இந்த சீசனில் டஃப் ஆன போட்டியாளராக கருதப்படும் யுகேந்திரனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள யுகேந்திரனுக்கு ஒரு நாளைக்கு ரூ.27 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... லியோவில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பற்றி குக் வித் கோமாளி புகழ் அளித்த ஆச்சர்ய பதில்

click me!