பிக் பாஸ் தந்த பூஸ்ட்.. பட வாய்ப்புகளை அள்ளிக்குவிக்கும் பூர்ணிமா - பிரபல நடிகருடன் வெப் சீரிஸில் இணைகிறார்!

First Published Mar 26, 2024, 7:39 PM IST

New Web Series : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இப்பொது பிரபல நடிகை பூர்ணிமா ரவி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் புதிதாக உருவாகும் இணைய தொடர் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.    

Bigg boss

YouTube சேனல்கள் மூலம் பிரபலமான நடிகை தான் பூர்ணிமா ரவி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பங்கேற்று, 96வது நாள் 5 லட்சம் ரூபாயோடு அவர் வெளியேறினார்.

தேவதை வம்சம் நீயோ! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பட்டு புடவையில்... பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Bigg boss poornima

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய துவங்கியது. தற்பொழுது தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களை நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடரில் நடிக்க தற்பொழுது பூர்ணிமா ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Lingam

ஏற்கனவே "வளையம்" என்கின்ற படத்தை இயக்கியுள்ள பிரசாந்த் பாண்டியராஜன், தற்போது "லிங்கம்" என்கின்ற இணைய தொடரை புதிதாக இயக்க உள்ளார். இதில் பிரபல நடிகர் கதிர் நடிகை திவ்யா பாரதி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர். ஒரு கேங்ஸ்டர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இந்த இணைய தொடர், ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட உள்ளது.

கமலின் கல்ட் கிளாசிக் படமான சத்யா.. ரீமேக் செய்ய காத்திருக்கும் இளம் இயக்குனர்? - ஹீரோவாக நடிக்கப்போவது யார்?

click me!