அன்று கள்ளிபால குடுத்து வீசுனீங்க; இன்று கற்பழிச்சி வீசுரீங்க! எதிர்த்தா தே* பட்டம் தேடிவரும்- குமுறிய பிரபலம்

First Published Mar 8, 2024, 1:54 PM IST

ஜெயிச்ச மகளிர மட்டுமே கொண்டாடாம, ஜெயிக்க முடியாம திண்டாடுற, போராடுற மகளிரையும் சேர்த்து கொண்டாடுவோம் என பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.

Anitha Sampath

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், இன்று மகளிர் தினத்திற்கு கனத்த இதயத்துடன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது : சொல்லவே மனசு வரல.. இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். "மகளிர் தின வாழ்த்துகள்". ஏன்னா இதையும் சொல்லிக்காம கொண்டாடிக்காம போய்ட்டோம்னா இருக்குற கொஞ்ச நஞ்ச குவியமும் இந்த பாழாபோன genderக்கு கிடைக்காம போய்டுமோனு ஒரு பயம்தான்.

BiggBoss Anitha Sampath

1 வயசுனாலும் விடுறதில்ல; 9 வயசுனாலும் விடுறதில்ல; பொண்ணா இருந்தாலும்; பாட்டியா இருந்தாலும்; ஏன், நம்ம ஊர நம்பி வர foreignerனாலும் விடுறதில்ல. அன்னக்கி கள்ளிபால குடுத்து வீசுனீங்க. இன்னக்கி கற்பழிச்சி ஆத்துலயும் குளத்துலயும் சாக்கடையிலயும் வீசுரீங்க. குழந்தை பிறப்புக்காக படைக்கப்பட்ட அந்த ஒரு துவாரத்த காப்பாத்திகிறதுலயே பொண்ணுங்க வாழ்க்கை போய்டுது. பாக்குற படிக்குற ஒரு ஒரு செய்தியும் வெளிய வர நினைக்கிற மத்த பொண்ணுங்களையும் வீட்டுக்குள்ள அடைச்சிடுது.

Anitha Sampath Instagram

இன்னொரு பக்கம்.. நிறைய சிரிக்காத, நிறைய அழுவாத, நிறைய பேசாதானு அவளுக்கு புடிச்சத செய்ய உடாம அழுத்தி அழுத்தி வேடிக்க பாக்க வேண்டியது. Social mediaல முகத்தை காட்டிட்டோம்னா சந்திக்கிற digital rape மற்றொரு பக்கம். இத எதிர்த்து பேசிட்டோம்னா தேடி வரும் தே* பட்டம். அப்படியே இதையெல்லாம் மீறி வேலைக்கு போய்ட்டோம்னா, என் மனைவி வீட்டையும் பாத்துக்குறா வேலையும் பாத்துக்குறானு glorify பண்ணி பண்ணி மொத்ததையும் நம்ம தலையிலையே கட்டுறது.

இதையும் படியுங்கள்... மூளையில் கட்டியா? அஜித் உடலில் கண்டறியப்பட்ட புது பிரச்சனை என்ன? மேலாளர் கொடுத்த பரபரப்பு விளக்கம்

Anitha Sampath wishes for Womens Day

இது பத்தாதுனு வரதட்சனையா பணம் நகைநட்டு மட்டு மயிறு தொடப்பக்கட்டனு மாமியார் நாத்தனார் போல மத்த பெண்களாலயே பட்ற கஷ்டம். அவன் குடுக்குற புள்ளைக்கும் அம்மா வீடே செலவு பண்ணனும் வேற. (ஆனா அவங்க வீட்டு வாரிசுனு கொஞ்சி கொஞ்சி, தாத்தா பெயர கேட்டாலும் செலவு பண்ண நம்ம அப்பா பெயர முதல்ல சொல்லாம அவங்க அப்பா பெயரதான் சொல்லும்.)

பொண்ணுங்க அப்படி என்ன சாபம் தான் வாங்கிட்டு வந்தமோ தெரில..நமக்காக நம்ம voice out பண்ணிக்கிட்டா கூட அத வெறுக்க அவ்ளோ பெரிய கூட்டம். ஆண்கள் வலியெல்லாம் நல்லாவே தெரியும், நாங்க முடக்குற சமூகத்த பத்தி மட்டும்தான் பேசுறோம்னு எப்படி புரியவைக்கிறது. அடுத்த பலிகடா உங்க பெண் குழந்தையாகவும் இருக்கலாம் ங்குறதுதான் எங்க கவல.

Anitha Sampath Womens day post

பெண்கள தெய்வமாலாம் வணங்க வேணாம். மதிக்க கூட வேணாம். அவங்கள அவங்களா இருக்க விட்டாலே போதும். ஜெய்ச்ச மகளிர மட்டுமே கொண்டாடாம, ஜெய்க்க முடியாம திண்டாடுற, போராடுற மகளிரையும் சேர்த்து கொண்டாடுவோம். சொல்லும் போதே சொல்லவிடாம தொண்டை கணக்குது. இருந்தாலும் மகளிர் தின வாழ்த்துக்கள்”  என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Nayanthara Photo: தூரமாக செல்கிறோம்... குழந்தைகளுடன் நயன் - விக்கி பகிர்ந்த புகைப்படம்! இதில் கூட இடைவெளியா?

click me!