அரியலூர் - தஞ்சை நெடுஞ்சாலையில் கோர விபத்து; சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி 4 இளைஞர்கள் துடிதுடித்து பலி

By Velmurugan s  |  First Published May 7, 2024, 8:01 PM IST

அரியலூர் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு.


தஞ்சாவூர் நகர பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17), சண்முகம் (23), ஆகிய நான்கு பேரும் அரியலூரில் ஹோம நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். 

சுங்க கட்டண ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி; பணம் செலுத்த சொன்னதால் ஓட்டுநர் ஆத்திரம்

Tap to resize

Latest Videos

undefined

அப்போது ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்த நால்வரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பெயரை சொல்லி மோசடியா? அதிர்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்; போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நான்கு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!