Pongal 2024 : இந்த பொங்கலுக்கு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலங்கள் டிசைன்கள்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க...

First Published Jan 3, 2024, 1:22 PM IST

பொங்கல் அன்று உங்கள் வாசலை அழகாக்க ரங்கோலி கோலங்களை இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

பொதுவாகவே, நாம் விழாக்காலங்களில் வீட்டை அழகுபடுத்துவது உண்டு. அதிலும் குறிப்பாக பொங்கல் என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில், வீட்டில் தோரணங்கள் கட்டுவது, சுவர்களில் வண்ணங்கள் பூசுவது என வீட்டை அலங்கரிப்போம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, வீட்டிற்கு வெளியே வாசலில் கோலமிட்டால் தான் பொங்கல் முழுமை அடையும். இப்போது இங்கு தைப்பொங்கலுக்கு போடக் கூடிய ரங்கோலி கோலங்கள் பற்றிக் காணலாம். 

புள்ளி வைத்து கோலம்:  இந்த கோலம் போடுவது மிகவும் சுலபம். அனைவராலும் எளிதில் போடக் கூடியது. உங்களுக்கு எந்த டிசைனில் கோலம் போட விருப்பமோ அதற்கு ஏற்றார் போல் புள்ளி வைத்து கோல்ம் போடலாம்.

சிம்பிள் மற்றும் மார்டன் டிசைன்: இந்த கோலம் பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்கலாம். ஆனால் சற்று மார்டனாகக் காணப்படும். அதற்கு காரணம், வரைந்த கோலத்தில் கலர் பொடியை கொடுத்துவிட்டு, பின் அதனை வெள்ளைப் பொடியால் அலங்கரித்திருப்பதே ஆகும்.
 

ரோஜாப்பூ கோலம்: இதற்கு முதலில் அரிசி மாவால் கோலத்தைப் போட்டு, வண்ணங்களால் நிரப்பி, கோலத்தின் மேல் ரோஜாப்பூக்களை வைத்து அலங்கரிக்க வேண்டும். 

மயில் டிசைன்: இந்த டிசைன் பார்ப்போரின் கண்களை கவரும். இதனை போடுவது ரொம்ப ரொம்ப சிம்பிள்.. முதலில் மயில் படம் வரைந்து, பின் கலர் பொடியை கொண்டு நிரப்ப வேண்டும். கடைசியாக வெள்ளை கலர் பொடி வைத்து அலங்கரிக்க வேண்டும்.
 

வட்ட கோலம்: இந்த மாதிரியான ரங்கோலி போடுவது மிகவும் சுலபம். ஏனெனில் இதற்கு  மெனக்கேடுத்து எந்த ஒரு கடினமான டிசைனும் போடத் தேவையில்லை. இதற்கு முதலில், ஒரு வட்டம் போட்டு, அதனுள் கலர் பொடியை நிரப்பி, பின் ஆங்காங்கு டிசைனை வரைந்தால் போதும். அவ்வளவு தான்...

click me!