Beauty Tips : முகத்தில் சுருக்கம் இல்லாமல் பட்டுப் போன்ற சருமம் பெற பாலை இப்படி யூஸ் பண்ணுங்க!!

First Published Apr 12, 2024, 2:14 PM IST

முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும், பட்டுப் போன்ற சருமத்தை பெற விரும்பினால் பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
 

இன்றைய காலகட்டத்தில் பலர் பட்டுப்போன்ற சருமத்தை விரும்புகிறார்கள். இதுதான் இப்போது ட்ரெண்ட் என்று கூட சொல்லலாம். இப்படி பட்டு போன்ற சருமத்தை பெற பலர் பலவிதமான முயற்சிகளை எடுக்கின்றன. பொதுவாகவே, வயது ஏற ஏற, தோலில் கொலாஜன் உற்பத்தியும் குறையும். இதன் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான சாயல்கள் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இப்போது வயது வித்தியாசம் இல்லாமல், குறைந்த வயதிலும் முதியவர்கள் போலத்தான் சிலர் இருக்கிறார்கள். 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. மோசமான வாழ்க்கை முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு, வெயில், ஹார்மோன் சமநிலை, உணவுப் பழக்கம் என பல காரணங்கள் உள்ளன. இவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இந்நிலையில், முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும், பட்டுப் போன்ற சருமத்தை பெற விரும்பினால் பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

பச்சை பால்: ஒரு கிண்ணத்தில் காய்சாத பச்சை பாலை எடுத்துக் கொள்ளவும். இதில் பருத்தி உருண்டையை நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால்.. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் மறைந்து, சருமம் பளபளக்கும்.

பால் மற்றும் கற்றாழை: ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் பால் எடுத்து நன்கு கலக்கவும். இப்போது இந்தக் கலவையை கழுத்து, கை, முகம் ஆகிய இடங்களில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே வைக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய  தேங்காய் எண்ணெயுடன் 'இத'  கலந்து முகத்தில் தடவினால் போதும்!

பால் மற்றும் வாழைப்பழம்: இதை செய்ய முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் பிசைந்து கொள்ளவும். அதனுடன் பச்சைப் பால் சேர்க்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து மற்றும் கைகளிலும் தடவி, 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின் சிறிது
கழித்து முகத்தை கழுவவும்.

இதையும் படிங்க:  பச்சை பாலை முகத்தில் தடவுங்க.. நீங்கள் 40 லிருந்து 30 ஆக மாறுவீங்க!

பால் மற்றும் தேன்: ஒரு கிண்ணத்தில் பாலையும் தேனையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். அதை நன்கு கலந்து முகம், கழுத்து, கைகளில் தடவி 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை கழுவவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பட்டுப் போன்ற சருமத்தைப் பெறுவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!