Banana Peel On Hair : இத படிச்சா இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறிய மாட்டீங்க! வியக்க வைக்கும் நன்மைகள் இதோ..!

First Published Apr 30, 2024, 12:44 PM IST

இந்த பதிவில், வாழைப்பழத் தோலை தலைமுடியில் தேய்த்தால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்புவார்கள் இதற்காக பலவகையான பொருட்களை தலைக்கு பயன்படுத்துவார்கள். ஆனால், ரசாயனங்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்தினால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால், முடி உதிர்தல் ஏற்படும். எனவே, எப்போதும் இயற்கையான பொருட்களை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். அதுதான் நல்லது.

உண்மையில், இயற்கை பொருட்கள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத் தோல் அவற்றில் ஒன்றுதான். இது தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க மிகவும் திறம்பட செயல்படுகிறது. இந்த பதிவில், வாழைப்பழத் தோலை தலைமுடியில் தேய்த்தால் என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பழத் தோலை முடியில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும்.  குறிப்பாக, இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதை தலை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்கள் வலுவடையும் மற்றும் முடி ஆரோக்கியமாகவும் வளரும். 

உங்களுக்கு தெரியுமா..வாழைப்பழத் தோலை முடியில் தடவினால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. இவை இரசாயனங்கள் போன்ற எந்த மோசமான விளைவுகளையும் காட்டாது. வாழைப்பழத்தோலால் செய்யப்பட்ட பேக்கை முடியில் தடவினால், முடி பிரச்சனைகள் பெருமளவும் குறையும். 

இதையும் படிங்க: ஒரு நிமிடத்தில் பைசா செலவில்லாம முத்து போல ஜொலிக்கும் பற்கள் வேண்டுமா? வாழைப்பழத் தோலின் மகிமையே அதுதான்..!

தலைமுடியில் வாழைப்பழத் தோலைத் தேய்ப்பதன் மூலம் முடி இயற்கையான பொலிவுடன் இருப்பது மட்டுமின்றி, பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். மேலும் முடி மென்மையாகவும் மாறும். எனவே, உங்கள் தலை முடி  அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமெனில், வாழைப்பழத்தை தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:  வாழைப்பழத்தோலின் நன்மைகள் தெரிஞ்சா இனி தூக்கி எறிய மாட்டீங்க!

வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதை நீங்கள் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!