- Home
- Lifestyle
- ஒரு நிமிடத்தில் பைசா செலவில்லாம முத்து போல ஜொலிக்கும் பற்கள் வேண்டுமா? வாழைப்பழத் தோலின் மகிமையே அதுதான்..!
ஒரு நிமிடத்தில் பைசா செலவில்லாம முத்து போல ஜொலிக்கும் பற்கள் வேண்டுமா? வாழைப்பழத் தோலின் மகிமையே அதுதான்..!
Banana peels benefits: வாழைப்பழ தோலில் கொட்டி கிடக்கும் நினைத்து பார்க்காத நன்மைகள்...

வாழைப்பழம் சுவையாகவும் ஆரோக்கியமான நன்மைகளை கொண்டதாகவும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழத்தை விரும்பி உண்ணுவர். சுபநிகழ்ச்சிகளிலும் வாழைப்பழம் முதலிடம் பிடிக்கும். ஆனால் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலில் உள்ள ஆச்சரியமூட்டும் பல நன்மைகளை அறிவீர்களா? இங்கு வாழைப்பழத்தின் மகத்துவமான பயன்களை காணலாம்.
வாழைப்பழத்தின் தோலை மையாக அரைத்து, அதனுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக்கள் காணாமல் போகும் கரும்புள்ளிகள் தொல்லையும் அகலும்.
சிலருக்கு பற்கள் கறை படிந்தது போல மஞ்சள் வண்ணமாக இருக்கும். அவர்கள் தினமும் வாழைப்பழத் தோலால் பற்களை ஒரு நிமிடம் தேய்த்து வந்தால் மஞ்சள் பற்கள் கூட முத்து போல வெண்மையாக மாறும்.
தினமும் தூங்குவதற்கு முன்பு வாழைப்பழத் தோலை கொண்டு மரு உள்ள இடங்களில் நன்கு தேய்த்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். இதனால் விரைவில் மருக்கள் மறையும். புதியதாக மருக்கள் தோன்றாது.
தண்ணீரை சுத்தம் செய்வதில் கூட வாழைப்பழத் தோல் நல்ல பயன் அளிக்கும். குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை விடவும் வாழைப்பழத் தோல் அற்புதமாக செயல்படும் என பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூட ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!
நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கத்தை நீக்குவதிலும் வாழைப்பழத் தோல் நன்கு வேலை செய்கிறது. இந்த தோலை நன்கு மசித்து அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். அதன் பிறகு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இதனை அடிக்கடி செய்யலாம்.
பூச்சி கடிக்கும் போது உடனடியாக மருத்துவம் செய்வதில் வாழைப்பழத் தோலின் பங்கு அளப்பரியது. கொசுக்கடி அல்லது பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழ தோலை கொண்டு மசாஜ் செய்வதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அரிப்பும் குறையும்.
இதையும் படிங்க: உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பப்பாளி.. கட்டாயம் வாரம் ஒருமுறை சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?