Aparna Das : பீஸ்ட் பட நடிகையை காதலிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர்... திருமணம் எப்போது தெரியுமா?

First Published Apr 3, 2024, 12:54 PM IST

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் தீபக் உடன் பீஸ்ட் மற்றும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

Aparna Das

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் பீஸ்ட். இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் தான் அபர்ணா தாஸ். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணா தாஸ். அப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக அபர்ணாவை ஹீரோயினாக போட்டிருக்கலாம் என சொல்லும் அளவுக்கு முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கவனம் ஈர்த்தார் அபர்ணா தாஸ்.

aparna das marriage

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகை அபர்ணா தாஸுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவான டாடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணா தாஸ். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அபர்ணா. இப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதில் தன்னுடைய யதார்த்த நடிப்பால் கவனம் ஈர்த்தார் அபர்ணா தாஸ்.

இதையும் படியுங்கள்... கட்டுக்கடங்காத கூட்டம்... 2 முறை ஸ்டேஜ் உடைஞ்சிருச்சு! ரோபோ சங்கர் மகள் ரிஷப்சனுக்கு இத்தனை கோடி செலவா?

Aparna Das, Deepak Parambol

இதையடுத்து கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார் அபர்ணா தாஸ். அவர் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். அந்த ஜோடி தான் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர். அவர்களின் திருமணம் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி கேரளாவில் நடைபெற உள்ளதாம். அவர்களின் திருமண பத்திரிக்கையும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Aparna Das wedding invitation

நடிகர் தீபக் பரம்போலும், நடிகை அபர்ணா தாஸும், மனோகரம் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தற்போது அந்த காதல் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களுஅம் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகை அபர்ணா தாஸின் காதலன் தீபக் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சென்சேஷனல் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... 10 நாள் கால்ஷீட் தராததால் 13 கோடி போச்சு... உதயநிதி என்னை பழிவாங்க துடிக்கிறார் - பிரபல தயாரிப்பாளர் குமுறல்

click me!