10 நாள் கால்ஷீட் தராததால் 13 கோடி போச்சு... உதயநிதி என்னை பழிவாங்க துடிக்கிறார் - பிரபல தயாரிப்பாளர் குமுறல்
உதயநிதி ஸ்டாலின் தனது படத்துக்கு பத்து நாள் கால்ஷீட் தராததால், தற்போது 13 கோடியை இழந்து நிற்பதாக தயாரிப்பாளர் ராம சரவணன் தெரிவித்துள்ளார்.
udhayanidhi Stalin, Rama Saravanan
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமான பின்னர் ஹீரோவாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்த உதயநிதி, கைவசம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வந்தார். அவர் அமைச்சர் ஆன பின்னர் கலகத் தலைவன், மாமன்னன் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் உதயநிதி அறிவித்தார். தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார் உதயநிதி.
Udhayanidhi Stalin
உதயநிதி கைவசம் ஏஞ்சல் என்கிற படமும் இருந்தது. அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அப்படத்தை கிடப்பில் போட்டார் உதயநிதி. அதனால் அப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ஏஞ்சல் படத்தை தயாரித்த ராம சரவணன் என்பவர் உதயநிதி ஸ்டாலினால் தான் 13 கோடியை இழந்து தவிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அதியமான் இயக்கத்தில் கடந்த 2018-அம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் ஏஞ்சல். உதயநிதி ஸ்டாலின் தன் மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து இரண்டு முறை கதைகேட்ட பின்னர் தான் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2.75 கோடி சம்பளமாக பேசப்பட்டு, முன்பணமாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டதாம்.
இதையும் படியுங்கள்... இந்திரஜாவுக்கும் அவரது கணவர் கார்த்திக்கிற்கும் இத்தனை வயது வித்தியாசமா? பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
angel movie poster
பின்னர் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திய படக்குழு, பிஜி தீவில் சுமார் 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறது. 2019-ம் ஆண்டே ஏஞ்சல் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். அதன்பின்னர் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் போய் உள்ளது. பின்னர் 2021-ல் சட்டமன்ற தேர்தல் வந்தது. அதன் பணிகளில் பிசியாக இருந்தார் உதயநிதி. பின்னர் தேர்தல் முடிந்ததும் மாமன்னன் படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம்.
ஏஞ்சல் படத்துக்கு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாலே மொத்தமாக முடிந்திருக்குமாம். ஆனால் அதை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த உதயநிதி, அதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை கேட்டிருக்கிறார். அதை அவரிடம் படக்குழுவினர் கொடுத்துள்ளனர். அதை பார்த்த பின்னர் படத்தில் அவர் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். ஏனெனில் அதில் காவி உடை அணிந்து யாகம் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருந்ததாம். அந்த சமயத்தில் அவர் சனாதனம் பற்றி பேசி இருந்ததால் அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
Angel Movie Issue
உதயநிதி அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் தனக்கு 13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ள தயாரிப்பாளர் ராம சரவணன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் உதயநிதி மீது ரூ.25 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்ததால் தன்னை அவர் பழிவாங்க துடிப்பதாக ராம சரவணன் கூறி உள்ளார்.
அதுமட்டுமின்றி பெரு நிறுவனங்களுக்கு வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் தொழிலை தான் செய்து வருவதாகவும் அதை உதயநிதி முடக்க நினைப்பதாவும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உதயநிதியால் பணத்தை மட்டுமல்லாமல் நிம்மதியையும் இழந்து தவித்து வருவதாகவும், இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதவர் எப்படி தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றும் ராம சரவணன் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Aadhi - Nikki Galrani : க்யூட்டா வெட்கப்படும் மனைவி.. ரசிக்கும் ஆதி.. நிக்கி கல்ராணி கர்ப்பமா இருக்காங்களா?