மைக் மோகன் மீதான ஒருதலைக்காதல் தோல்வி... 3 குழந்தைகளை பெற்றெடுத்த அந்த நடிகை யார்? வெளிவந்த ரகசியம்

First Published Feb 4, 2024, 9:27 AM IST

80-களில் டாப் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகனை உருகி உருகி காதலித்த பிரபல நடிகை ஒருவர் அவரை திருமணம் செய்யவும் விரும்பினாராம்.

Mohan

1980-களில் தமிழ் திரையுலகில் பல்வேறு வெள்ளி விழா படங்களை கொடுத்து வசூல் வேந்தனாக திகழ்ந்தவர் மைக் மோகன். அந்த சமயத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த அனைத்து நடிகைகளுடனும் நடித்துள்ள மைக் மோகன், பெரிதும் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வந்தார். அப்படி இருந்த அவரை ஒரு நடிகை துரத்தி துரத்தி காதலித்ததோடு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தினாராம். அந்த நடிகை பற்றி பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருக்கிறார்.

Actor Mohan

அவர் கூறியதாவது : “தற்போது திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை அந்த சமயத்தில் மைக் மோகனிடம் வலிய வலிய சென்று நான் உங்களை காதலிக்கிறேன், என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள், திருமணத்துக்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால் நடிகையின் இந்த பேச்சுக்கெல்லாம் மோகன் மசியவில்லை. இவர் மட்டுமின்றி பல நடிகைகள் மோகனுக்கு காதல் வலை விரித்தார்கள் ஆனால் அவர் அதில் சிக்கவே இல்லை.

இதையும் படியுங்கள்... உங்க வெற்றியின் சீக்ரெட் என்ன? ஓப்பனா கேட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

Bayilvan Ranganathan

இதனிடையே மோகனுக்கு எய்ட்ஸ் வந்ததாக வதந்தியை பரப்பினார்கள். அதைப்பற்றியும் அவர் கவலைப்படவில்லை. ஒருசமயத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகிய மைக் மோகன், சென்னையிலேயே தான் இருந்தார். இவர் ராமராஜனை போல் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் இருந்தார். மோகனின் மனைவி இண்டீரியர் டெகரேஷன் செய்யும் தொழிலை செய்து வருகிறார். கமல்ஹாசனின் ஜெராக்ஸ் காப்பி தான் மைக் மோகன்.

mic mohan

கமல்ஹாசன் மும்பைக்கு சென்று இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் மைக் மோகன் தமிழில் அறிமுகமானார். கமலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகைகளை கொண்டிருந்தார் மோகன். இவரும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் தான். மோகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் முதுகெலும்பாக இருந்தது. இந்த காம்போவில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது என பயில்வான் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Mohan new movie: வேற லெவல் டைட்டிலுடன் ஹீரோவாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்! வெளியான சூப்பர் தகவல்

click me!