ஒருமுறை சார்ஜ் செய்தால் இ-ஸ்கூட்டரில் 100 கிமீ போகலாம்.. விலை 50 ஆயிரம் கூட இல்லை..

First Published Apr 9, 2024, 5:07 PM IST

லெக்ட்ரிக்ஸ் E2W அதிவேக இ-ஸ்கூட்டர் ரூ.49,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை செல்லும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும்.

High-Speed E-Scooter

எஸ்ஏஆர் குழுமத்தின் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவான லெக்ட்ரிக்ஸ் EV, E2W ஐ ரூ.49,999க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. லெக்ட்ரிக்ஸ் மின்சார வாகனமானது வாகனத்தில் இருந்து பேட்டரியை பிரித்து வாடிக்கையாளர்களுக்கு சேவையாக வழங்கும் முதல் ஓஇஎம் (OEM) ஆகும்.

Lectrix E2W

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரம்பு, 50 கிமீ வேகம் மற்றும் வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்துடன் வருகிறது. இதுபற்றி விளக்கமாக கூறியுள்ளார் லெக்ட்ரிக்ஸ் இவியின் பிசினஸ் தலைவர் பிரித்தேஷ் தல்வார்.

Lectrix EV

அதில் இந்த புதிய மின்சார இரு சக்கர வாகனம் விலையில்லா மலிவு விலையில் ரூ. 49,999 முதல் எக்ஸ்-ஷோரூம் விலையை வழங்குகிறது. சந்தா மாதிரியில் உள்ள எங்கள் பேட்டரியை ஐசிஇ (ICE) வாகனங்களுடன் ஒப்பிடும்போது, முந்தையவற்றின் நன்மைகள் ஒப்பிடமுடியாது.

Electric Vehicle

ஐசிஇ வாகனத்தை வாங்குவதற்கான முன்கூட்டிய செலவு ரூ.1 லட்சமாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!