பண்ணை வீட்டில் காதல் திருமணம்... நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் போட்டோஸ்

First Published Sep 13, 2023, 9:20 AM IST

நடிகர் அசோக் செல்வன் தன் நீண்ட நாள் காதலியான நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ள நிலையில், அவர்களது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ashok selvan Marriage

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இளம் நடிகர் தான் அசோக் செல்வன். இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

ashok selvan, keerthi Pandian wedding

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தமிழ் சினிமாவில் தும்பா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அவர் நடித்திருந்தார்.

ashok selvan wedding photos

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து தற்போது திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர காரணமே பா.இரஞ்சித் தானாம் - கியூட் லவ் ஸ்டோரியின் பின்னணி

ashok selvan keerthi pandian wedding

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள நடிகர் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது. இயற்கை சூழல் நிரம்பிய அந்த இடத்தில் மேடை அமைத்து அதில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Ramya Pandian

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகை கீர்த்தி பாண்டியனின் அக்காவான நடிகை ரம்யா பாண்டியனும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். வருகிற செப்டம்பர் 17-ந் தேதி சென்னையில் நடக்க உள்ள திருமண வரவேற்பில் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ashok selvan, Keerthi Pandian

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து திருமணம் செய்துகொண்ட அழகிய புகைப்படங்கள் தான் இவை.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் இது கல்யாண சீசன்! கவினை தொடர்ந்து காதல் திருமணம் செய்ய காத்திருக்கும் 6 அம்சமான ஜோடிகளின் லிஸ்ட்

click me!