Grand ஆக நடைபெற்ற அசோக் செல்வன் திருமண வரவேற்பு! சூர்யா முதல் ஆர்யா வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

First Published Sep 18, 2023, 8:38 AM IST

காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் ரிஷப்சன் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

ashok selvan keerthi pandian wedding reception

சூது கவ்வும் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து தெகிடி, பீட்சா 2 போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்ட அசோக் செல்வன். தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகிறார்.

Harish kalyan at ashok selvan wedding reception

அண்மையில் இவர் நாயகனாக நடித்த போர் தொழில் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் வெற்றியடைந்த கையோடு தன்னுடைய திருமணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து கரம்பிடித்துள்ளார்.

santhanu at ashok selvan wedding reception

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் காதல் திருமணம் கடந்த வாரம் திருநெல்வேலியில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து இவர்கள் இருவரும் திருமண புகைப்படத்தை பதிவிட்டபோது, கீர்த்தி பாண்டியனை சிலர் உருவ கேலி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை

Blue star team at ashok selvan wedding reception

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று தன்னுடைய காதல் மனைவியுடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு, உலகின் மிகவும் அழகான பெண் என வர்ணித்து இருந்தார் அசோக் செல்வன். இதன்மூலம் தன்னுடைய மனைவியை கிண்டலடித்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

suriya karthi at ashok selvan wedding reception

நேற்று அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

vani bhojan at ashok selvan wedding reception

அதேபோல் நடிகர்கள் சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வந்து அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது. இவர்களின் ரிஷப்சன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஹல்தி நிகழ்ச்சியில் ப்ரபோஸ் செய்த கீர்த்தி! லிப் லாக் அடித்த அசோக் செல்வன்! களைகட்டிய கொண்டாட்டம்! போட்டோஸ்

click me!