கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் SK உடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.முருகதாஸ் - ரிலீஸ் தேதியுடன் வந்த அசத்தல் அறிவிப்பு

First Published Mar 12, 2024, 2:05 PM IST

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக பாலிவுட் நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

AR Murugadoss

விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் ஏ.ஆர்.முருதகாஸ். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார். கடந்த 2020 ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. தர்பார் படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யின் 65-வது படமாக அது தயாராக இருந்தது.

Sivakarthikeyan Ar murugadoss

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஏ.ஆர்.முருகதாஸ் மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென அவர் சொன்ன கதை விஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, ஷூட்டிங் தொடங்கும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அந்த வாய்ப்பு இயக்குனர் நெல்சனுக்கு சென்றது. அவர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்தார்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு... சூப்பர் ஹிட் ஷோவை கையிலெடுத்த விஜய் டிவி - அப்போ டிஆர்பி எகிறப்போகுது

SK 23 Movie

விஜய் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சுமார் 3 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அப்படத்தின் படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகி உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

AR Murugadoss Next Movie With Salman Khan

சிவகார்த்திகேயன் பட வேலைகளில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தான் இயக்க உள்ள மற்றுமொரு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி அப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அப்படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் 2025-ம் ஆண்டு ரமலான் பண்டிகைக்கு, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை காண தயாராகுங்கள் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சந்தானம் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வடக்குப்பட்டி ராமசாமி..!

click me!