Anikha: இந்த மாதிரி கேள்வி என்கிட்ட கேட்காதீங்க! எனக்கு 17 வயசு தான் ஆகுது...எல்லை மீறியதால் கடுப்பான அனிகா!

First Published Apr 10, 2024, 10:18 PM IST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக மாறியுள்ள மலையாள பைங்கிளி அனிகா சுரேந்தரிடம், தொகுப்பாளர் எல்லை மீறி கேள்வி எழுப்பியதால் அவர் கடுப்பான சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
 

anikha surendran

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த, அனிகாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் கெளதம் மேனனை தான் சேரும். இவர் தல அஜித்தை வைத்து இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக அனிகாவை நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய மழலைத்தனம் மாறாத நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அனிகா.
 

அஜித்தின் ரீல் மகளாகவே பார்க்கப்பட்ட அனிகா, அடுத்தடுத்து தரமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் இவர் நடித்த மிருதன், நானும் ரவுடி தான், மாமனிதன், விஸ்வாசம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

Thalapathy Vijay: தன்னுடைய அம்மா ஷோபாவுக்காக தளபதி விஜய் கோவில் கட்டியுள்ளாரா? வைரலாகும் போட்டோ.!

குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே... மாடலிங் செய்வதிலும் ஆர்வம் காட்டிய அனிகா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்தார். 

Anikha

18 வயதை எட்டியதும் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் ஆர்வம் காட்டி வரும் அனிகா... கடந்த ஆண்டு தெலுங்கில் புட்ட பொம்மை  படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மலையாளத்தில், இவர் நடித்த முதல் படத்திலேயே லிப் லாக் காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார். தற்போது இவர் 'வாசுவின் கர்ப்பிணிகள்' மற்றும் 'ராயன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என தெரிகிறது.

Kizhakku Vaasal: கதாநாயகியால் வந்த பிரச்சனை? ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி கிழக்கு வாசல் சீரியல்!
 

இவருக்கு 17 வயது இருக்கும் போது... தொகுப்பாளர் இவரிடம் எக்குத்தப்பாக கேள்வி எழுப்ப, அதற்க்கு கடுப்பாகி பதிலளித்துள்ளார். தொகுப்பாளர் இவரிடம் நீங்கள் பீர் குடிப்பீர்களா, அல்லது வைன் குடிப்பீர்களா? என எல்லை மீறி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்க்கு அனிகா எனக்கு 17 வயது தான் ஆகிறது, ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் என அவரிடம் காட்டமாக பதில் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

click me!