Pomegranate Juice : தினமும் ஒரு கிளாஸ் 'மாதுளை ஜூஸ்' குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?

First Published Apr 12, 2024, 7:00 AM IST


தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

மாதுளை எல்லாரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது 
உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை வாரி வழங்குகிறது என்று அனைவரும் தெரிந்ததுதான்..

குறிப்பாக இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இது நாள்பட்ட வீக்கத்தைக் குறைப்பதிலும், டைப்-2 நீரிழிவு போன்ற நோய்களைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

உங்களுக்கு தெரியுமா..மாதுளை புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் இதில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இந்த பழம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. எனவே, தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் நெஞ்சுவலியின் தீவிரம் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதுமட்டுமின்றி, மாதுளை ஜூஸ் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். அதனால் தான் இந்த ஜூஸை தொடர்ந்து குடியுங்கள் என்றும், இது சிறுநீரகத்திற்கு நல்லது என நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இந்த ஜூஸ் துர்நாற்றத்தை குறைக்கிறது. இதனால், பல் சிதைவு தடுக்கிறது.

செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து  வந்தால் செரிமானம் மேம்படும். மேலும், இது குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன் விளைவாக, வாயு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

click me!