பச்சை மிளகாய் ஊற வைத்த தண்ணீரை குடிங்க... இந்த மாயாஜால மாற்றங்கள் நடக்கும்!

First Published May 2, 2024, 11:27 AM IST

பச்சை மிளகாய் தண்ணீரை குடிப்பதினால் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், பலர் ஆரோக்கியமாக இருக்க இயற்கை உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களை சாப்பிடுகிறார்கள். அப்படி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருளை கண்டிப்பாக உங்கள். அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அது வேறு ஏதுமில்லை பச்சை மிளகாய் தான்.

உங்களுக்கு தெரியுமா..பச்சை மிளகாயில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவில் சேர்ப்பதால் சுவையை அதிகரிக்கும். இந்நிலையில், பச்சை மிளகாய் தண்ணீர் மற்றும் அதன் நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.

பச்சை மிளகாய் தண்ணீரை குடிப்பதினால் பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சரி வாங்க இப்போது இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: பச்சை மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. காரணம் இதில் வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உடலை நோய்த்தொற்றுகள், வைரஸ்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் இதில் பீட்டா கரோட்டின் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்: சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பச்சை மிளகாய் தண்ணீர் ஒரு சிறந்த தீர்வாகும். இந்த நீரை குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதுமட்டுமின்றி, இது எடையும் கட்டுக்குள் வைக்கும். மேலும் இதில் நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்தை மேம்படுத்தும். அதுபோல், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

இதையும் படிங்க: Health Tips: பச்சை மிளகாய் சாப்பிட்டால் சளி தொல்லை நீங்குமா? ஆச்சரிய மூட்டும் தகவல்கள் இதோ..!!

சரும ஆரோக்கியத்திற்கு: நல்ல பளபளப்பான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், பச்சை மிளகாய் நீர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படிங்க:  Green Chili Alva: ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாயில் சுவையான அல்வா செய்வது எப்படி?

பச்சை மிளகாய் தண்ணீர் செய்வது எப்படி?
இரவில் தூங்கும்  முன் 3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி, பின் அதன் மையத்தில் ஒரு பிளவு செய்து,  1 கிளாஸ் தண்ணீரில் அதை போட்டு ஊற வைக்கவும். இந்த தண்ணீரை நீங்கள் அதிகாலையில் குடிக்க வேண்டும். இந்த தண்ணீரைக் குடிப்பதற்கு முன் நீங்கள் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!