குளிர்காலத்தில் சுட சுட காபியில் 'இந்த' ஒரு பொருள் கலந்து குடிங்க.. அசந்து போவீங்க..அவ்வளவு நன்மைகள் இருக்கு!

First Published Jan 19, 2024, 11:16 AM IST

இந்த குளிர்காலத்தில் காபியில் நெய் கலந்து குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை..

உலகளவில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி குடிப்பது காபி. அந்த அளவிற்கு அதன் சுவை அருமையாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், காபியை விரும்பாதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. பலர் தங்கள் நாளை ஒரு கப் காபியுடன்  தொடங்குகிறார்கள். நீங்களும்  உங்கள் நாளை அப்படிதான் தொடங்குகிறீர்களா..? அப்படியெனில், இந்த ஒரு பொருள் உங்கள் வழக்கமான கப் காபியை அதிக சத்தானதாக மாற்றும் என்பது பலருக்குத் தெரியாது. அதுதான் நெய்! 
 

ஆம்.. ஏனெனில், நெய் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. எனவே, காபியில் நெய் சேர்த்து குடிக்கலாம். பல பாலிவுட் பிரபலங்களும் இந்த பானத்தை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கியுள்ளனர். 
 

குளிர்காலத்தில் நெய் காபி குடிப்பதால்  கிடைக்கும் நன்மைகள்:

ஆற்றல் அளவை அதிகரிக்கும்: வழக்கமான காபியை விட நெய் காபி உங்களுக்கு நீண்ட கால ஆற்றலைக் கொடுக்கும். எப்படியெனில், நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் காபியில் உள்ள காஃபினை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும்: உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள் அவசியம். அந்தவகையில், நெய்யில் ஒமேகா-3, 6 மற்றும் 9 இன் சிறந்த மூலமாகும். இது இதய ஆரோக்கியத்திற்கும்,  வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படிங்க:  காபி குடித்த பின் வயிற்றில் தொந்தரவு? கவலை வேண்டாம்.. இதை  மட்டும் செய்யுங்கள்..!

குடல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது: வழக்கமான காபி பலருக்கு அமிலத்தன்மையை உண்டாக்கும். ஆனால் நெய் காபி அப்படி செய்வதில்லை. நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமான செயல்முறையைத் தூண்டுவதற்கும், சிறந்த இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

இதையும் படிங்க:  காபி vs தேநீர்.. எதில் நன்மைகள் அதிகம்? உடலுக்கு எது ஆரோக்கியமானது?

உடலை சூடாக வைக்கும்: நெய் காபி உங்களை இயற்கையாகவே சூடாக வைத்திருக்கும். எனவே, இந்த குளிர்காலத்தில் நெய் காபி கண்டிப்பாக குடியுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நெய் காபி தயாரிப்பது எப்படி?
வழக்கமாக குடிகும் காபியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து சிறிது நேரம் அடுப்பை இப்போது நீங்கள் விருப்பப்படி சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

click me!