ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளத்தால் குறைந்தது 300 பேர் பலி; ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம்!

By SG Balan  |  First Published May 12, 2024, 9:31 AM IST

"பாக்லான் மாகாணத்தில் 311 பேர் பலியாகியுள்ளனர். 2,011 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 2,800 வீடுகள் சேதமடைந்துள்ளன" என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வின் தகவல் தொடர்பு அதிகாரி ரானா டெராஸ் தெரிவித்துள்ளார்.


வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். வெள்ளத்தில் தப்பியவர்கள் சேறும் சகதியுமான உள்ள இடத்திலிருந்து வெளியேற முயலும் காட்சிகள் வைரலாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக உள்ள பக்லான், தாகர் மற்றும் பதக்‌ஷன் ஆகிய வடக்கு மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பக்லான் மாகாணத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐநாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பும் உலக உணவு அமைப்பும் தெரிவித்துள்ளன.

Latest Videos

undefined

அங்குள்ள பக்லானி ஜெயித் பகுதியில் மட்டும் 1,500 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஐநா அவசரகால மீட்பு அமைப்பின் முகமது பஹிம் தெரிவித்துள்ளார். ஆனால் தலிபான் அரசு வெள்ளிக்கிழமை இரவில் 62 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளது. அதே சமயம், தலிபான் உள்துறை அமைச்சகம் கனமழை பாதிப்பை தேசிய பேரிடாக அறிவித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!

The UN Food Program has confirmed that the death toll in has been increased to 300 due to the flash floods caused by the heavy seasonal rains. said the torrential rain and devastating floods also battered north and northwestern Afghanistan.… pic.twitter.com/ODAY8Zb52Y

"பாக்லான் மாகாணத்தில் 311 பேர் பலியாகியுள்ளனர். 2,011 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 2,800 வீடுகள் சேதமடைந்துள்ளன" என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வின் தகவல் தொடர்பு அதிகாரி ரானா டெராஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் வெள்ளப்பெருக்கு பல மாகாணங்களை பாதித்துள்ளது. வடக்கு தகார் மாகாணத்தில் 20 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று பெய்த கனமழையால் வடகிழக்கு மாகாணமான பதக்‌ஷன், மத்திய கோரின் மாகாணம் மற்றும் மேற்கு மாகாணமான ஹெராத் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாற்பது ஆண்டுக்காலப் போரினால் பேரழிவிற்குள்ளான ஆப்கானிஸ்தான், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. புவி வெப்பமடைதலின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத நாடுகளில் ஒன்று எனவும் விஞ்ஞானி கருதுகின்றனர்.

எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்கதான் பொறுப்பு: முன்னாள் ஃபைசர் ஊழியர் மெலிசா எச்சரிக்கை

click me!