எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்கதான் பொறுப்பு: முன்னாள் ஃபைசர் ஊழியர் மெலிசா எச்சரிக்கை
முன்னாள் ஃபைசர் ஊழியரான மெலிசா 2021 அக்டோபரில், MRNA தடுப்பூசி ஆய்வக சோதனைகளில் மனித கரு திசுக்களில் இருந்து பெறப்பட்ட செல்களை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி அந்நிறுவனத்தின் மின்னஞ்சல்களை வெளியிட்டார்.
ஃபார்மா நிறுவனமான ஃபைசர் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை கசியவிட்ட மெலிசா மெக்டீ, தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அரசாங்கமும் ஃபைசர் ஃபார்மா நிறுவனமும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஃபைசர் கோரோனா தடுப்பூசி பற்றி கவலைகளை வெளிப்படுத்திய இரண்டு பேர் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து, மெலிசா ட்விட்டர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். களைப்பாக இருப்பதாகக் கூறியுள்ள மெலிசா, தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதில்லை என்றால், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஃபைசர் நிறுவனமும் அரசாங்கமும்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் மெலிசா மெக்டீ. நான் ஒரு ஃபைசர் விசில்ப்ளோவர். ஃபைசரில் சுமார் பத்து ஆண்டுகள் உற்பத்திப் பிரிவில் வேலை செய்தேன். நான் ஒரு ஏமாற்றப்பட்டதைப் போல உணர்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். சண்டை போட்டு, விவாதம் செய்து, ஆராய்ச்சி செய்து அலுத்துவிட்டேன்" என்று மெலிசா குறிப்பிட்டுள்ளார்.
வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய சக்திவாய்ந்த சூரியப் புயல்; பவர் கிரிட்கள் செயலிழக்க வாய்ப்பு!
"நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதில்லை. நானும் என் கணவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் என் மகனை நேசிக்கிறேன். என் குடும்பத்தை நேசிக்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஃபைசர் ஊழியரான மெலிசா 2021 அக்டோபரில், MRNA தடுப்பூசி ஆய்வக சோதனைகளில் மனித கரு திசுக்களில் இருந்து பெறப்பட்ட செல்களை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி அந்நிறுவனத்தின் மின்னஞ்சல்களை வெளியிட்டார்.
மெலிசாவைப் போல ஃபைசர் தடுப்பூசி பற்றி குற்றம்சாட்டிய 45 வயதான டீன், சுவாசப் பிரச்சனைகளை காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா மற்றும் MRSA பாக்டீரியா தொற்றுடன் போராடிய அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டீனின் மரணத்துக்கு முன் ஜான் பார்னெட் சென்ற மார்ச் மாதம் உயிரிழந்தார்.
எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து 50 பேருடன் உடலுறவு கொண்டவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை