சீனப் பெருஞ்சுவர் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான கட்டுமானங்களின் ஒன்றாக திகழ்கிறது
சீனா முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் சீனப் பெருஞ்சுவர் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான கட்டுமானங்களின் ஒன்றாக திகழ்கிறது. 8,850 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பிரம்மாண்டமான அமைப்பு, உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டட அமைப்பாக புகழ்பெற்று விளங்குகிறது. இந்த சீன பெருஞ்சுர் உலகெங்கிலும் உள்ள மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்த பெருஞ்சுவர் மிங் வம்சத்தின் போது கட்டப்பட்ட கோட்டையான ஷான்ஹாய் கணவாயில் இருந்து உருவானது, சுவரின் முக்கியத்துவம் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது."Laolongtou," அல்லது Old Dragon’s Head என பெயரிடப்பட்ட இந்தப் பகுதி, மிங் வம்சத்தின் ஆட்சியின் கீழ் 1579ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
undefined
நாய்கள் செருப்பை கடிப்பதற்கு இதுதான் காரணமா? பலருக்கும் தெரியாத தகவல்..
எனினும் இந்த சீனப் பெருஞ்சுவர் தொடர்பாக பல கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் வலம் வருகின்றன. அந்த வகையில் விண்வெளியில் இருந்து பார்த்தால் கூட இந்த பெருஞ்சுவரை பார் இந்த தவறான நம்பிக்கைகளில், இது விண்வெளியில் இருந்து தெரியும் என்று கூறப்பட்டது.
அதாவது நிலவில் இருந்து பார்த்தால் கூட சீன பெருஞ்சுவரை பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. இந்த கட்டுக்கதை பல நூற்றாண்டுகளாக நீடித்தது, 8 ஆம் நூற்றாண்டில் ஆங்கில விஞ்ஞானி ரெவ் வில்லியம் ஸ்டுக்லே போன்ற நபர்களின் யூகத்தால் இந்த தகவல் வேகமாக பரவியது. நிலவில் இருந்து பார்த்தால் இந்த பெருஞ்சுவரை பார்க்க முடியும் என்று கணித்தார்.
இதேபோல், 19 ஆம் நூற்றாண்டில், இத்தாலிய வானியலாளர் ஜியோவானி ஷியாபரெல்லி செவ்வாய் கிரகத்தின் அம்சங்களைக் ஆராய்ந்த போது அவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், நாசாவின் அப்பல்லோ பயணத்தின் போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. நிலவின் மேற்பரப்பில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், பல நேர்காணல்களின் போது கட்டுக்கதையை நிராகரித்தார். பூமியின் கேன்வாஸை அலங்கரிக்கும் இயற்கை அம்சங்கள் மட்டுமே நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் என்றும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.
உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உண்டா...? ரொம்ப நாள் யூஸ் பண்ணா விளைவு பயங்கரம்!
அப்பல்லோ 12 பயணத்தின் போது நிலவில் நடந்த மற்றொரு விண்வெளி வீரரான ஆலன் பீன் இதே கருத்தை உறுதிப்படுத்தினார். மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த அமைப்பையும் நிலவில் இருந்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.