தொடர்ந்து அனிருத்தை புறக்கணிக்கும் தனுஷ், ரஜினி மகள்கள்..? பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

First Published Feb 7, 2024, 12:26 PM IST

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ஆகியோர் அனிருத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் அடிக்கடி அனிருத் உடன் இணைந்து பணியாற்றி உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமான 3 படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது துள்ளலான இசை மூலம் தடம் பதித்தார் அனிருத். 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகளவில் ட்ரெண்டாகி யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் பாடல்கள் ஒன்றாக இடம்பிடித்தது. 

இதை தொடர்ந்து தனுஷ் – அனிருத் கூட்டணி வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்கள் வரை தொடர்ந்தது. மேலும் ஜி.வி. கமிட்டான பட வாய்ப்பை எல்லாம் கூட தனுஷ் அனிருத்திற்கு வாங்கிக்கொடுத்ததாக கூறப்பட்டது. இதனால் தனுஷ் – ஜி.வி பிரகாஷ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. 

மறுபுறம் சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு காரணமாக அனிருத் தனது படங்களை தனுஷ் தவிர்த்து வந்தார். ஐஸ்வர்யாவும்  இதனையே பின்பற்றி வந்தார். தனது 2-வது படமான வை ராஜா வை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைக்க வைத்தார்.

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு தனுஷ் இசையமைத்த நிலையில், வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இது ரஜினியின் 2-வது மகள் சௌந்தர்யா இயக்கி இருந்த படம். தனுஷ் – அனிருத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் அனிருத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இப்போது ஐஸ்வர்யா தனுஷை பிரிந்துவிட்ட போதிலும் தனது லால் சலாம் படத்திற்கு அனிருத்தை பயன்படுத்தவில்லை. அதே போல் சௌந்தர்யா ரஜினிகாந்த் லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அல்லது ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திலும் அனிருத் இல்லை. 

Dhanush 50

லால் சலாம் படத்திற்கு இசையமைக்க நேரமில்லை என்று அனிருத் கூறியதே ரஜினி மகள்கள் அவரை புறக்கணிப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மறுபுறம் தனுஷும் அனிருத் உடன் பணியாற்றுவதை தவிர்த்து வருகிறார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். அதே போது தனுஷின் வரவிருக்கும் படங்களான D50 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், D51 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே தங்களின் வரவிருக்கும் படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, தனுஷ் ஆகியோர் அனிருத்தை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. 

Anirudh

இதனிடையே தற்போது அனிருத் கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி, ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!