தொலைச்சத தேடி எடுத்துட்டு வாங்க... வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா; லால் சலாம் OTT ரிலீசுக்கு வந்த சிக்கல்?

First Published Apr 4, 2024, 3:00 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீசுக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Aishwarya Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுமார் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இயக்கிய திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

Rajinikanth daughter Aishwarya

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இதற்கு முன்னர் வெளிவந்த இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்திருந்தாலும், லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அவரை முன்னிலைப்படுத்தி தான் படத்தின் புரமோஷனையும் செய்திருந்தனர். அதுமட்டுமின்றி லால் சலாம் ஆடியோ லாஞ்சில் பேசுகையில், இப்படம் உங்கள் அனைவரின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெறும் என்றெல்லாம் பேசி இருந்தார் ஐஸ்வர்யா.

இதையும் படியுங்கள்... ரஜினியை விட 100 கோடி அதிக சம்பளத்துடன் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோஸின் Salary விவரம் இதோ

Lal Salaam

இந்த படத்துக்கு இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே அப்படி படத்தில் என்ன தான் இருக்கிறது என்கிற ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அழுத்தமான கதைக்களம் இருந்தும் வழக்கம்போல் திரைக்கதையில் சொதப்பி இருந்ததால், ஐஸ்வர்யாவின் பிளாப் லிஸ்ட்டில் லால் சலாமும் இணைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

lal salaam OTT release

படம் தோல்வி அடைந்த பின்னர் அதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் ஐஸ்வர்யா, அதில் லால் சலாம் படத்திற்காக 21 நாட்கள் படமாக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதும் ஒரு காரணம் என கூறி அதிர்ச்சி அளித்தார் ஐஸ்வர்யா. அவர் பேட்டியில் இதை ஓப்பனாக சொல்லியது தற்போது ஓடிடி ரிலீசுக்கு சிக்கலாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. காணாமல் போன அந்த 21 நாள் காட்சிகளை கொடுத்தால் தான் படத்தை ஓடிடியில் வெளியிடுவோம் என அப்படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறிவிட்டதாகவும், இதனால் தான் அப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... Hari : ஓரு படத்துக்கு ப்ரோமோஷன் எவ்வளவு முக்கியம்? தேர்தலை மேற்கோள்காட்டி அழகாக விளக்கிய இயக்குனர் ஹரி!

click me!