Aishwarya Rai: வெறும் 1,500 ரூபாய்க்காக விளம்பரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்...இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ

First Published May 25, 2022, 2:29 PM IST

Aishwarya Rai Salary: ஐஸ்வர்யா ராய் தனது 18 வயதில், மாடலிங் விளம்பரத்தில் நடித்த போது அவருக்கு ரூ. 1500 சம்பளம் கொடுக்கப்பட்ட பில் கிடைத்திருக்கிறது.

Aishwarya Rai

உலக அழகிப் பட்டம் வென்ற பிறகு ஐஸ்வர்யா ராய், 1973ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவின் மங்களூருவில் பிறந்தவர்.  பாலிவுட்டின் முன்னணி நடிகையான அவர் பின்னர் ஹாலிவுட்டுக்கும் சென்றார்.தமிழில்  1997ம் ஆண்டு இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயின் ஆக்கினார் இயக்குநர் மணிரத்னம்.

Aishwarya Rai

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஷங்கரின் ஜீன்ஸ், ராஜிவ் மேனனின் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், மணிரத்னத்தின் குரு, ராவணன் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 
 

Aishwarya Rai

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரமான நடித்துள்ளார். கடந்த 2003ம் ஆண்டு முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். கேன்ஸ் 2022  கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடந்தார்.

Aishwarya rai

அவருடன் கணவர் அபிஷேக் பச்சனும், மகள் ஆராத்யாவும் கலந்து கொண்டனர். உலக அளவில் பிரபலமான ஐஸ்வர்யா ராய் நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்தார்.  ஐஸ்வர்யா ராய், தனது 18 வயதில் வெறும் 1,500 சம்பளத்துக்கு பத்திரிக்கை போட்டோஷூட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

Aishwarya rai

அந்த சம்பள பில் காப்பி தற்போது சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 766 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரியான ஐஸ்வர்யா ராய் ஒரு விளம்பர படத்தில் நடித்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் படிக்க....Vanitha Son: வனிதாவை பற்றிய நபரின் ஏடாகூட கேள்வி..? மகன் கொடுத்த ஷாக்கிங் பதில்...வாயடைத்து போன நெட்டிசன்..

click me!