Uma Ramanan Passed Away: தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்!

Published : May 02, 2024, 06:38 AM ISTUpdated : May 02, 2024, 06:40 AM IST
Uma Ramanan Passed Away: தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்!

சுருக்கம்

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். 

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன்(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலகங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். மேலும், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், திருப்பாச்சி என 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன் திலீப் குமார்! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உமா ரமணனின் கணவர் ரமணனும் பிண்ணனி பாடகர் தான். சன் டிவியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். சென்னை அடையாறில் தனது கணவர் ரமணனுடன் வசித்து வந்தார். 

கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா ரமணைன் இறுதிச் சடங்குகள் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை மூலம் 'மாற்றம்' சமூக நலப்பணியை துவங்கிய லாரன்ஸ்! கை கோர்த்த முன்னணி நடிகர்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?