அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்'... முதல் சிங்கிள் வெளியீடு!

By Manikanda Prabu  |  First Published May 1, 2024, 9:38 PM IST

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2: தி ரூல்' படத்தில் இருந்து 'புஷ்பா புஷ்பா' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது


சர்வதேச தொழிலாளர் தினம் உலகளவில் மே 1 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 1-ஐ கொண்டாட இன்னும் சிறப்பான புதிய காரணம் ஒன்று இணைந்துள்ளது. ஏனெனில், நம் இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘புஷ்பா2: தி ரைஸ்’ திரைக்கு வர இருக்கிறது. இன்று புஷ்பராஜின் கொண்டாட்டப் பாடல் 6 மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் புதிய ஆந்தமாக மாறியிருக்கிறது. ‘புஷ்பா புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே இணையம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ‘ஹேண்ட் ஆஃப் புஷ்பா’ டீசரில் புஷ்பாவின் கை பிராண்ட் ஆனது. 'புஷ்பா 1' படம் வெளியானதிலிருந்து  'புஷ்பாயிஸம்' என ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக உள்ளது. தேசம் முழுவதும் உள்ளா அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் 'புஷ்பா'வாக மீண்டும் வென்றுள்ளார்.  

Tap to resize

Latest Videos

அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே..! பிரபல நடிகைகளின் ரியல் மகள்களின் க்யூட் போட்டோஸ் இதோ..

'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், 'புஷ்பா2' படத்தில் புதிய பாடல் மூலம் மீண்டும் சார்ட் பஸ்டர் இசையைத் தந்துள்ளார். ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இந்தப் பாடல் ரிப்பீட் மோடில் முதலிடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடல் வரிகளும் உற்சாகமான இசையும் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. நகாஷ் அஜீஸ், தீபக் ப்ளூ, மிகா சிங், விஜய் பிரகாஷ், ரஞ்சித் கோவிந்த் மற்றும் திமிர் பிஸ்வாஸ் போன்ற பிரபல பாடகர்களை பாடலை அந்தந்த மொழிகளில் பாடியுள்ளனர். 'புஷ்பா2:  தி ரூல்' இசையை டி சீரிஸ்  வெளியிட்டது. 

 

“Pushpa Pushpa” song is out now.

- https://t.co/vMpwJkuKOr pic.twitter.com/k1pQJ89HNS

— Allu Arjun (@alluarjun)

 

'புஷ்பா2: தி ரூல்' இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம்.  படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார்  படத்தை இயக்கியுள்ளார்  மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

click me!