தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ஆம் தேதியும், 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 26ஆம் தேதியும் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் வரவிருக்கும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டு தமிழ்நாடு அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக தலைவர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதனை உறுதி செய்யும் வகையில் உதயநிதியின் இந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அமைந்தது.
தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின் செல்லாத இடங்களுக்கும் அவர் சார்பாக சென்று பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், வாக்குப்பதிவு நாளன்று தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்: உச்சம் தொட்ட வேலூர், கரூர் பரமத்தி!
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 24 நாள் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
REAL ROWDY❤️ pic.twitter.com/iE1L50lxgP
— Udhay (@Udhaystalin)
சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ள அமைச்சர் உதயதி ஸ்டாலின் வருகிற 10ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, விமானத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.